அடிக்கடி சீரக நீர் அருந்தினால் நம் உடலில் நேரும் அதிசயம்

 
seeragam seeragam

பொதுவாக சீரகம் என்றதும் நமக்கு நினைவில் வருவது அதன் செரிமான சக்தி .மேலும் நம் எலும்புகளுக்கும் வலு சேர்க்கும் ,மேலும் சில பெண்களுக்கு வரும் மாதவிடாய் வயிறு வலியையும் இது குறைக்கும் .இவ்ளோ சக்தி வாய்ந்த சீரகத்தின் மற்ற நன்மைகளை இந்த ப்பதிவில் பார்க்கலாம் 

1.நம் உடல் ஆரோக்கியத்திற்கும் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பினை கரைக்கக்கூடிய பொருளாகவும்  நெடுங்காலம் சீரகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
2.இந்த சீரகம் செரிமானத்தை சீராக்கி, உடலிலுள்ள நச்சுப்பொருள்களை அகற்றும் , 
3. தொடர்ந்து சீரகத்தை ஏதாவது ஒருவிதத்தில் சேர்த்து வருவது உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும். 4.மேலும் , சீரகம் உடலிலுள்ள கொழுப்பு கரைவதை துரிதப்படுத்தும். இதன் காரணமாகவே எடை குறைகிறது. 
5.உணவில் சீரகத்தை சேர்த்துக்கொள்வதோடு, சீரக தண்ணீரை அருந்த பலர் கூறுகின்றனர் 
6. பல வகையான சத்துள்ள இந்த சீரக நீரை அருந்தினால் உடல் எடை குறைகிறது. 
7.சீரகத்தில் 7 கலோரி ஆற்றல் மட்டுமே உள்ளது. இது மிகவும் குறைவான கலோரி அளவாகும். குறைவான கலோரி கொண்டதாக இருப்பதால் இதை அதிக அளவில் உண்ணலாம்; அருந்தலாம். 
8.நமக்கு ஏற்படும் கொடுமையான பசியை ஆற்றும் சக்தியும் சீரகத்திற்கு உண்டு. 
9.பசி அதிகமாக இருக்கும்போது சீரகத் தண்ணீரை பருகினால், பசி அடங்கும்; தேவையற்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.  
10.இரவு சாப்பாட்டுக்குப் பின்னர் சீரக நீர் அருந்தினால் செரிமானம் நன்றாக நடக்கும். 
11.ஆகவே, அதிக அளவில் சீரக நீரை தயாரித்து அவ்வப்போது தொடர்ந்து அருந்தலாம்..