நோயின் வலையில் விழாமல் இருக்க எப்படி குளிக்கணும் தெரியுமா ?
பொதுவாக இப்போது பொல்யூஷன் அதிகம் இருப்பதால் சிலர் தினம் தலை குளிப்பதுண்டு .இன்னும் சிலருக்கு சைனஸ் தொல்லையிருந்தால் வாரம் ஒரு முறை தலை குளிப்பர் .இந்த பதிவில் ஒருவர் எப்போது தலை குளிக்க வேண்டும் என்பது பற்றி அலசுவோம்
1. பொதுவாக ஒருவரின் முடியின் தன்மை பொருத்து தினமும் தலைக்கு குளிக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டும் .
2. ஒருவரின் தலையில் அரிப்பு,தொல்லையிருந்தால் தினம் தலை குளிக்கலாம்
3.ஒருவருக்கு பொடுகு தொல்லையிருந்தால் தினம் தலை குளிக்கலாம்,
4.ஒருவருக்கு அதிக வியர்வை ஏற்பட்டால் தினமும் தலைக்கு குளிக்கலாம்.
5. ஒருவரின் தலைமுடி வறண்டிருந்தால் , தினமும் தலைக்கு குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
6.ஒருவரின் முடி கடினமாக இருந்தாலோ தினமும் தலைக்கு குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
7. சிலர் வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு குளிப்பர் .இப்படி குளிப்பது தவறான விஷயம்.
8. தலை குளிக்கும்போது ஷாம்பூவை அளவாக பயன்படுத்த வேண்டும்.
9. தலை குளிக்கும்போது முடியை நன்றாக அலச வேண்டும்.
10.தண்ணீர் மட்டும் ஊற்றிக்கொண்டு தலைக்கு குளித்தால் அழுக்கு தலையில் அப்படியே தேங்கி இருக்கும். இதனால் பிரச்சினை வரும்.
11. ஒருவர் தலை குளிக்கும்போது ரசாயன ஷாம்பூவை தவிர்த்தல் நல்லது.
12.. ஒருவர் தலை குளிக்கும்போது டென்ஷன், மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

