இஞ்சியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா ?

 
Ginger Ginger

பொதுவாக இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணம் உள்ளது .இதை அதிகமாய் உணவில் சேர்த்து கொண்டால் நம் செரிமான சக்த்தியை மேம்படுத்தும் .இது குடல் இயக்கத்தை மேம்படுத்தும் ,மேலும் இதயத்தினை பலப்படுத்தும் .மேலும் நம் இருமலை கட்டுப்படுத்தி ,நம் உடலில் உள்ள எலும்புகளை பலப்படுத்தும் ,மேலும் இதன் நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 


1.பொதுவாக மலிவாக மார்க்கெட்டில் கிடைக்கும் இஞ்சியில் விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம் சத்துக்கள்  உள்ளன. 
2.மேலும் இஞ்சி சுகர் பேஷன்டின்   சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் 
3.மேலும்,இஞ்சி  நம் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் 
4.பொதுவாக இஞ்சியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராகும்.
5. ஆஸ்துமா நோயாளிகள் தினமும் இஞ்சி நீரில், தேன் கலந்து குடித்து வந்தால் ஆஸ்த்துமா குணமாகும் 
6.இனி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இஞ்சி துவையல் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் -
.முதலில் இஞ்சியை சுத்தம் செய்து துண்டு, துண்டாக நறுக்கிக்கொள்ள வேண்டும். 
7..பின்னர் அதனுடன் சேர்க்க தேங்காயை  நன்றாக துருவிக்கொள்ள வேண்டும். 
8.பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி,அந்த எண்ணெயில்  இஞ்சியை  வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
9.பின்னர், காஞ்சமிளகாய், உளுத்தம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை தனித்தனியே வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
10.இவை அனைத்தையும் ஆற வைத்து, ஒரு மிக்ஸியில் போட்டு, கொஞ்சமாக புளி மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
11.பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி விடுங்கள் .பின்னர் அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்து வைத்த விழுதில் சேர்த்தால் சுவையான இஞ்சி துவையல் ரெடி