நல்லெண்ணெயில் இவ்ளோ நன்மை அடங்கியுள்ளதா ?
பொதுவாக எண்ணெய்யில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நம் உடல் எடை கூடும் ஆனால் நல்லெண்ணெய் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது
உடல் எடையை குறைக்க உதவும் ஒரு சிறந்த எண்ணெயை பற்றி இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம்.
1.நல்லெண்ணெயில் நிறைந்துள்ள வைட்டமின் E இதய நோய், பெருந்தமனி தடிப்பு, பக்கவாதம் போன்ற பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது
2.நல்லெண்ணையில் நிறைந்துள்ள புரதம் , பசியை குறைத்து , கலோரி உட்கொள்ளலை குறைத்து எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. .
3. நல்லெண்ணையில் கால்சியம் துத்தநாகும் தாமிரம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன.
4.நல்லெண்ணெயில் நிறைந்துள்ள நார்ச்சத்து நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் செய்வதன் மூலம் உங்கள் உடல் எடையையும் குறைக்கலாம். மேலும் இது இரத்த சர்க்கரையின் அளவுகள் அதிகரிப்பதையும் தடுக்கிறது.
5.நல்லெண்ணை கெட்ட கொலஸ்ட்ராலின் உறிஞ்சுதல் மற்றும் கொழுப்பின் வளர்ச்சிதை மாற்றத்தை குறைக்கின்றன.
6.நல்லெண்ணெயில் குறைந்த அளவு சோடியம் மட்டுமே உள்ளதால், உடலில் ஏற்படும் நீர் தேக்கத்தை கட்டுப்படுத்தும்
7.நல்லெண்ணெய் சூடான விளைவை கொண்டுள்ளது, எனவே கோடையில் இதை அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது.


