வெள்ளை பூண்டு எந்தெந்த நோய்களை தடுக்கும் தெரியுமா ?
பொதுவாக நம் தமிழர் வீட்டு சமையலில் இஞ்சி பூண்டு எப்போதும் சேர்த்து சமைக்கும்படி நம் முன்னோர்கள் பழக்கப்படுத்தியுள்ளனர் .அவ்விரண்டு பொருட்களும் நம் உடலில் பல்வேறு நோய் தாக்காமல் பாதுகாக்கிறது .எனவே இந்த பதிவில் வெள்ளை பூண்டு சமைப்பதில் நமக்கு உண்டாகும் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்
1.பொதுவாக வெள்ளைப் பூண்டு நெடி மிக்கதாக இருந்தாலும், நல்ல சுவையும் கொண்டது.
2.வெள்ளைப் பூண்டு உணவில் சேர்க்கப்பட்டால் எந்த உணவுக்கும் இது சுவையூட்டக்கூடியது.
3.வெள்ளைப் பூண்டு மருத்துவ குணங்களும் நிறைந்தது.
4. வெள்ளைப் பூண்டு சேர்த்து சமைத்தால் உயர் மற்றும் குறை இரத்த அழுத்த பாதிப்புகளை இது குணமாக்கும்.
5.வெள்ளைப் பூண்டு நம் உடலில் சேரும் அதிக கொலஸ்ட்ராலை குறைக்கும்.
6.வெள்ளைப் பூண்டு இதய பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயத்தை தடுக்கும்.
7.வெள்ளைப் பூண்டு சாப்பிட்டால் பெண்களுக்கு கர்ப்பப்பையில் நார்த்திசுக் கட்டிகள் உருவாகாமல் பாதுகாக்கிறது.
8.வெள்ளைப் பூண்டுக்குள் இருக்கும் கந்தகம் (சல்பர்) நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது..


