தொடர்ந்து வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் அதிசய மாற்றம்

 
energy

காலை எழுந்ததும் பல் துலக்கிய கையுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது பல வகைகளில் ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. இதனால் உங்கள் உடலுக்காக நீங்கள் காலையில் செய்யும் முதல் நன்மை இதுவாகத்தான் இருக்கும். அப்படி என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
 காலை எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் நிணநீர் ஆற்றல் பெறுகின்றன. இதனால் நோய் தொற்றுகளை தாக்கும் ஆற்றலை உடல் பெறுகிறது. மேலும் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது

காலை எழுந்ததும் குடிக்கும் ஒரு கிளாஸ் தண்ணீராக இருந்தாலும் அது உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை வெளியேற்ற தூண்டும். நச்சுகளை வெளியேற்ற உதவும் சிறுநீரகத்திற்கு போதுமான தண்ணீர் காலையிலேயே கிடைத்தால் அதன் வேலையை சிறப்பாக செய்துவிடும்.

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குறைந்தது இரண்டு கிளாஸ் முதல் மூன்று கிளாஸ் தண்ணீர் குடிக்க தொடங்குங்கள் சில வாரங்களுக்கு முறையாக அதனை பின்பற்றி பாருங்கள், அதன் பிறகு ஏற்படும் நன்மைகளை நீங்கள் உணர தொடங்குவீர்கள். 

water

ஆற்றலை அதிகரிக்கும்

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா!

உடல் சோர்வு உடலில் போதுமான அளவு தண்ணீர்  இல்லாததால் ஏற்படலாம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது  சோர்வை குறைக்கவும் உடல் சிறப்பாக செயல்படவும் உதவுகிறது.

உடல் எடையை குறைக்க உதவும்

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா!

சில ஆய்வுகளின்படி, உணவுக்கு முன் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பவர்கள்  வேகமாக உடல் எடை இழக்கிறார்கள் என்று கூறப்படுகிறது, இதற்கு உள்ள காரணம் தண்ணீர் உங்கள் வயிற்றை நிரப்புகிறது மற்றும் அதிகமாக சாப்பிடும் போக்கைக் குறைக்கிறது. இதனால் உடல் எடை குறைகிறது.

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்களை வெளியேற்றும் திறன் தண்ணீருக்கு உள்ளது. தண்ணீர் குடிப்பது சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கு காரணமான அதிகப்படியான ரசாயனங்கள், தாதுக்கள் மற்றும் உப்புகளை தண்ணீர் நீர்த்துப்போகச் செய்கிறது, இதோடு சேர்த்து உடலில் உள்ள நச்சுக் கழிவுகளையும் சிறுநீர் வழியாக  வெளியேற்றுகிறது.

சரியான செரிமானத்திற்கு

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா!

சரியான செரிமானம் ஆரோக்கியமான உடலை பராமரிக்க உதவுகிறது. அஜீரணம் ஏற்பட்டால் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படலாம். தினசரி  6-8 கிளாஸ் தண்ணீரை உட்கொள்ளுங்கள். இந்த நடைமுறை பயனுள்ள உணவு செரிமானத்திற்கு உதவும் மற்றும் ஒழுங்கற்ற குடல் இயக்கங்களையும் கட்டுப்படுத்தும். 

கீல்வாதத்திற்கு

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா!

போதுமான அளவு தண்ணீரை குடிக்க விட்டால் மூட்டுகளில் உள்ள வழவழப்பு தன்மை குறைந்து மூட்டுகளில்  உராய்வு ஏற்படும். இதனால் மூட்டுகளில் வலி ஏற்படலாம். வழக்கமான நீர் உட்கொள்ளல் குறைவது முடக்கு வாதம் போன்ற மூட்டு பிரச்சினைக்கு வழிவகுக்கும். இவை ஏற்படாமல் தடுக்க  தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஒற்றை தலைவலி

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா!

ஒற்றைத் தலைவலி  ஏற்படுவதற்கு  போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது ஒரு காரணமாக இருக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர்  குடிக்க  தொடங்குங்கள். இது உடலில் நீர் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியைத் தடுக்கும்.