காப்பி குடிப்பதால் திடீரென்ற மாரடைப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதா ?-ஆய்வு முடிவு கூறுவதென்ன ?

 
Heart attack Heart attack

பொதுவாக நம் நாட்டில் பலருக்கும் காபி குடிக்காமல் பொழுதே விடியாது .அப்படி பல கோடி பேரை காபி அடிமையாக்கி வைத்துள்ளது . இந்த காபி குடிப்பதால் நன்மையா தீமையா என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1.பொதுவாக காபியில் அதிகளவு காஃபின் இருக்கிறது .இதன் மூலம் இதய நோய் உண்டாகும் என்ற கருத்து 
 பொது மக்களிடையே நிலவியதால் பலர் கலக்கமடைந்தனர்  
2.இந்த காப்பி குடிப்பதால் திடீரென்ற மாரடைப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற கருத்தும் நிலவியது . 
3.ஆனால் இந்த மேற்கூறிய கருத்துக்களை புறந்தள்ளி விட்டு , உலகளவில் கோடிக்கணக்கானோர் தினமும் காபி அருந்தி வருகின்றனர். 
4.இந்நிலையில்,இந்த காபி பற்றி தெரிந்து கொள்ள  8,000 பேரை தேர்வு செய்தது லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகம் .அவர்களை வைத்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 
5.அந்த யூனிவர்சிட்டி , தினசரி ஒரு கப், மூன்று கப், பல கப் என்று காபி அருந்துபவர்களை தரம் பிடித்து ஆய்வு மேற்கொண்டது .இதில்  யாருக்கும் காபியால் எந்த பாதிப்பும் உடலில் ஏற்படவில்லை. 
6.இதனால், நாள் ஒன்றுக்கு 25 கப் வரை காபி அருந்தினால் கூட அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று கூறியது .இந்த ஆய்வு முடிவு காபி பிரியர்களை உற்சாகமடைய செய்தது . 
7.காபி எனப்படும் உற்சாகமூட்டும் பானம் இல்லாமல் இங்கு பலருக்கும் காலை நேரம் சுறுசுறுப்பாகவே இருக்காது.
8.இந்த செய்தியால் காபி எனும் தேசிய பானம் காப்பாற்றப்பட்டுள்ளதாக குதூகலிக்கின்றனர் காபி ப்ரியர்கள்!