உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் இந்த நீர்
பொதுவாக சூடு சம்பந்தமான நோய்கள் வராமலிருக்க அடிக்கடி இளநீர் ,வெள்ளரிப்பிஞ்சு போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வோம் ,இதில் இளநீர் மூலம் நமக்கு என்ன நன்மை என்று இந்த ப்பதிவில் பார்க்கலாம்
1.இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் வராமல் நம்மை காக்கும்
2.இளநீர் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக இருக்கிறது
3.சிலருக்கு கிட்னியில் கல் உருவாகும் .பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் இளநீரில் அதிகம் இருப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும்.
3.இளநீர் அதிகம் குடிப்பதால் முகத்தில் ஏற்படும் பருக்கள், புள்ளிகள்,குணமாகும்
4.உடலில் இருக்கும் சுருக்கங்கள் மற்றும் படை போன்ற இடங்களில் இளநீரைதடவினால் சரும பிரச்சனைகள் சரியாகும்.
5.மேலும் இளநீர் அதிகம் குடிப்பதால், இளநீர் முதுமை தோற்றத்தை தடுக்கவும் உதவுகிறது.
6.மேலும்இளநீர் அதிகம் குடிப்பதால் இதிலுள்ள செலினியம் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராக போராடும்.
7.இளநீர் அதிகம் குடிப்பதால், இளநீர் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும்
8.மற்றுஇளநீர் அதிகம் குடிப்பதால் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறதாம்.
9.இளநீரில் கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்ற கனிமங்கள் உள்ளன. இந்த கனிமங்கள் ஆரஞ்சு போன்ற பழங்களை விட அதிகமாக உள்ளன.


