என்னது! ப்ரோக்கோலிக்குள் இவ்ளோ ஆரோக்கியம் அடங்கியிருக்கா?இது தெரியாம போச்சே .

 
broccoli

\.நமது நாட்டில் பயன்படுத்தப்படும் காய்கறிகளில் பல அந்நிய நாடுகளிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் பலரும் சாப்பிடக்கூடிய ஒரு காய்கறியாக பிரக்கோலி இருக்கிறது. இந்த பிரக்கோலி மத்திய தரைக்கடல் பகுதியை சுற்றியுள்ள நாடுகளை பூர்வீகமாக கொண்டதாகும். பழங்காலத்தில் ரோமானியர்களின் உணவில் ப்ரோக்கோலியை அதிகம் பயன்படுத்தினர். தற்போது உலகெங்கிலும் உள்ள மக்கள் ப்ரோக்கோலியை அதிகம் விரும்பி உண்கின்றனர். முட்டைகோஸ், காலிஃப்ளவர் குடும்பத்தை சார்ந்த ப்ரோக்கோலியில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன.  .
ப்ரோக்கோலி தனித்துவமானது. செம்பு, இரும்பு, துத்தநாகம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி, மற்றும் பி வைட்டமின்கள் தவிர வைட்டமின் கே, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் ஆகியவை இதில் அடங்கும். இந்த ஊட்டச்சத்துக்கள் எலும்பு உருவாக்கம் மற்றும் எலும்பு வலிமையை மேம்படுத்தும் வகையில் உடலில் செயல்படுகின்றன.

broccoli

ப்ரோக்கோலி ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை நீங்கள் முழுமையாக தெரிந்திருக்கமாட்டீர்கள்.

இந்த பச்சைக் காய்கறியில் நீங்கள் அறிந்திராத பல நன்மைகள் உள்ளன. இதை சாலட் வடிவில் உட்கொள்வதில் இருந்து காய்கறிகளை சமைத்து சாப்பிடுவது வரை பல நன்மைகள் உள்ளன. அந்த நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

புற்றுநோய்: ப்ரோக்கோலியை உட்கொள்வது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது என்று பல ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. இதில் அதிக அளவு பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன, இது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது. ப்ரோக்கோலி உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதையும் தடுக்கிறது. இது தவிர, ப்ரோக்கோலியில் சல்போராபேன் உள்ளது, இது புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.

இதயம்: ப்ரோக்கோலியில் நல்ல அளவு நார்ச்சத்து, குரோமியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இது மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கிறது. இது தவிர ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க ப்ரோக்கோலி ஒரு சிறந்த காய்கறி.

கர்ப்ப காலத்தில்: கர்ப்ப காலத்தில் ப்ரோக்கோலியை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். ப்ரோக்கோலியில் வைட்டமின்கள், கால்சியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதில் இரும்புச்சத்து அதிகளவு நிறைந்துள்ளது. இது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. மேலும், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு பிரச்சனைகளின் அபாயத்தையும் இது குறைக்கிறது.

மூட்டுவலி: ப்ரோக்கோலி கீல்வாதத்திற்கு சிகிச்சையளிப்பதில் நன்மை பயக்கும். ப்ரோக்கோலியில் சல்போராபேன் இருப்பதாக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது, இது எலும்புகளில் ஏற்படும் மூட்டுவலி அபாயத்தைக் குறைக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி: ப்ரோக்கோலியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. வைட்டமின் சி நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.