தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் எந்த நோயெல்லாம் வராது தெரியுமா ?
பொதுவாக நாம் சாப்பிடும் பழங்கள் நமக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கிறது .அதிலும் நாம் பூஜை மற்றும் விசேஷங்களில் வைக்கும் வாழை பழத்தில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரின் தேவை இருக்காது என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி. ஆனால் ஆயுர்வேதம் வாழைப்பழம் சாப்பிட சொல்கிறது
2.ஆமாம் ,தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் உங்களிடம் எந்த ஒரு நோயும் நெருங்காது என்று கூறுகிறது ஆயுர்வேதம்.
3.அந்த ஆயுர்வேதத்தின் படி, வாதம் மற்றும் பித்தத்தை வாழைப்பழம் சீராக்குகிறது
4.ஆனால் சில நேரம் செரிமானம் ஆகாத வாழைப்பழம், நம் உடலில் சளியை அதிகரிக்கும் வாய்ப்பும் உண்டு என்று ஆயுர்வேதம் அடித்து கூறுகிறது.
5.நம் உடலில் வாதம் , கபம் , பித்தம் என்ற மூன்று தோஷங்கள் உள்ளது .இம்மூன்று தோஷங்களையும் சீராக வைக்க வாழைப்பழம் உதவுகிறது ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றன.
6.மேலும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடல் குளிர்ந்த நிலையில் இருக்கிறது.
7.மேலும் சிலர் இப்பழம் உடல் பருமனை கூட்டும் என்று நினைக்கின்றனர் .ஆனால் உடல் பருமனைக் குறைக்க வாழைப்பழம் உதவுகிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது .
8.நமது , தசைகளை பலமாக்கவும், வாழைப்பழம் பெரிதும் உதவுகிறது என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது .
9.மேலும் இரத்த சோகை உள்ளவர்கள், வாழைப்பழம் சாப்பிடுவதால், ஹீமோக்ளோபின் அளவு அவர்களின் இரத்தத்தில் அதிகரிக்கிறது என்றும் ஆயுர்வேதம் அடித்து கூறுகிறது.


