உடலில் உள்ள கொழுப்பை கரைக்க இந்தக்காய் உதவுகிறது

 
amla amla

பொதுவாக நம் உடலுக்கும் மூளையின் ஆற்றலுக்கும் விட்டமின் சி சத்து அவசியமான ஒன்று .இந்த விட்டமின் சி காக்க சிலர் அதிக அளவு மாத்திரை எடுத்து கொள்வதுண்டு .ஆனால் இயற்கையான நெல்லிக்காய் பொடியில் இந்த விட்டமின் நிறைய இருக்கிறது .வேறு எந்த நோய்க்கு நெல்லிப்பொடி உதவும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1. சிலரின் உடலில் கொழுப்பு அதிகமாய் இருக்கும் .நமது உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள கொழுப்பை கரைக்கவும் நெல்லிக்காய் உதவுகிறது.
2.சிலரின் உடலில் சக்தி குறைவாய் இருக்கும் .முக்கியமாக ஆண்களின் ஆற்றலை அதிகரிப்பதற்கு நெல்லிக்காய் உதவுகிறது.
3. சிலரின் உடலில் சுகர் அளவு அதிகமிருக்கும் .இதய நோய் மற்றும் நீரிழிவு நோயைத் தடுப்பதற்கு நெல்லிக்காய் முக்கிய அங்கமாக இருக்கிறது.
4.சிலரின் உடலில் மூளையின் செயல்பாடு குறைவாய் இருக்கும் .நெல்லிக்காய் சாப்பிட்டால் மூளையின் செயல்பாடு அதிகரிப்பது மட்டுமல்லாமல் நினைவாற்றலும் அதிகரிக்கும்.
5.சிலருக்கு முடி உதிரும் .நமது முடிக்கு சரியான ஊட்டச்சத்தை நெல்லிக்காய் கொடுக்கிறது. 
6.சிலருக்கு பொடுகு இருக்கும் .பொடுகு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நெல்லிக்காய் சாப்பிட்டால் விடுபடலாம்.
7.சிலரின் உடலில் சுருக்கம் இருக்கும் .தோலில் உள்ள புள்ளிகள் மற்றும் வயது சுருக்கங்களை தடுக்கவும் நெல்லிக்காய் உதவுகிறது.
8.நெல்லிக்காயை அரைத்து மஞ்சள் மற்றும் நல்லெண்ணெய் கலந்து உடலில் தேய்த்து குளித்தால் சருமம் இயற்கையாகவே அழகாக மாறும்.
9.சிலரின் உடலில் அமிலத்தன்மை இருக்கும் .இந்த அமிலத்தன்மை நிரந்தரமாக நீங்க வேண்டும்  
10.அதற்கு இரவு உணவு முடித்த பிறகு ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும்.