தினந்தோறும் பாதாம் பருப்பு உட்கொண்டு வருபவர்களுக்கு எந்த நோய் வராது தெரியுமா ?

 
padham padham

பொதுவாக வயது அதிகமாக அதிகமாக மூளையின் செல்கள் அழிய தொடங்குவதால் ,ஞாபக மறதி உண்டாகிறது .இந்த ஞாபக மறதி நோய்க்கு சிலவகை தியானம் உதவி புரிகிறது .மேலும் ஒருசில உணவு பொருட்களும் உதவி புரிகின்றது .உதாரணமாக 
முதியவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி நோயை, பாதாம் உட்கொண்டு வருவதன் மூலம் தடுக்க முடியும். பாதாம் ஒருவருடைய முகப் பொலிவைக் கூட்டுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட பாதாமை உணவாகக் கொண்டால் கிடைக்கும் ஆரோக்கியம் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம் 

1.உடலுக்கு ஆரோக்கியம் தரும் பாதாமில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. 
2.உடலுக்கு ஆரோக்கியம் தரும் பாதாமில் மங்கானிஸ், தாமிரம் மற்றும் ரிபோபிளாவின் சக்தி,இருப்பதால் பாதாம் உட்கொள்பவர்கள் புத்துணர்வோடு இருப்பர்.
3.தினந்தோறும் பாதாம் பருப்பு உட்கொண்டு வருபவர்களுக்கு உடலில் நல்ல கொழுப்பு கூடி கெட்ட கொழுப்பு குறைகிறது. 
4.நலம் தரும் பாதாமில் உள்ள நல்ல கொழுப்பு, புரதம் மற்றும் பொட்டேஸியம் இருதயத்திற்கு நல்லது.
5. நலம் தரும் பாதாமில் உள்ள போலிக் அமிலம் தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுத்து நிறுத்துகிறது. 
6.நலம் தரும் பாதாம்  இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. 
7.மேலும் பாதாமில் உள்ள சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. 
8.நலம் தரும் பாதாம்  மூளைத் திறனை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. 
9.நலம் தரும் பாதாம் இரத்தத்தில் சீனி மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
10.சீனி சேர்க்கப்படாத பாதாம் பால் எடையைக் குறைக்க உதவுகிறது. உடல் பருமன் உடையவர்கள் பாதாமின் துணை கொண்டு எடையைக் குறைக்க முயற்சி செய்யலாம்.