சுக்குப்பொடியை உப்புடன் சேர்த்து தினமும் காலையில் பற்களை துலக்க என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக நமது உடலை நோயின்றி பராமரிக்க நம் முன்னோர்கள் வீட்டில் உள்ள பொருளை கொண்டு நிறைய நாட்டு வைத்தியத்தை விட்டு சென்றுள்ளார்கள் .இந்த நாட்டு வைத்தியத்தில் சுக்குக்கு முக்கிய பங்குண்டு .இதன் மூலம் எந்த நோயை தடுக்கலாம் என்று பார்க்கலாம்
1.வாயில் துர்நாற்றம் உள்ளவர்கள் சுக்குப்பொடியை உப்புடன் சேர்த்து தினமும் காலையில் பற்களை துலக்கலாம்.
2.மேலும் ஈறுகளையும் இந்த பொடிக் கொண்டு மசாஜ் செய்வது போல செய்தால் பல் கூச்சம், பற்சொத்தை ஏற்படாமல் தடுக்கும்..
3.வாய்வு பிரச்சனைக்கு அரை ஸ்பூன் சுக்குப் பொடியுடன், அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.
4. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுபோன்று நாம் உண்ணும் உணவில் சுக்கை சேர்த்து வந்தால் வாத நோய்கள், மலச்சிக்கல், ஆஸ்துமா போன்றவை வராமல் தடுக்கலாம்.
5. சுக்கை தட்டி பாலுடன் சேர்த்து அரைத்து மூட்டுகளுக்கு பற்று போல் போட்டு வந்தால் தீராத மூட்டு வலியிலிருந்து குணம் பெறலாம்.
6.சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை, ஆகிய ஐந்தும் கலந்த பொடியை வெந்நீரில் காய்ச்சி குடித்தால் கடுமையான சளி மற்றும் கபம் விலகும்.
7.சுக்குப் பொடியை அல்லது சுக்கை வெங்காயத்துடன் அரைத்து சாப்பிட்டால் வயிற்றிலுள்ள புழு, பூச்சிகள் அழிந்துவிடும். .
8.தினமும் சுக்குக் காபி குடிப்பதால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள்.
9.அஜீரணப் பிரச்சனைகள் நீங்கும். மலச்சிக்கல் குணமாகும். மந்தத்தன்மை மறையும்.
10.தேள், வண்டு போன்ற விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால் உடனடியாக ஒரு வெற்றிலையில் சுக்கு, 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டால் பூச்சு கடியின் விஷத்தன்மையை முறிக்கலாம்.



