சுக்கு சேர்த்து கொண்டால் அது எந்தெந்த நோயை கொல்லும் தெரியுமா ?

 
sukku

பொதுவாக சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை ,சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுளுமில்லை என்று ஒரு பழமொழி நம் தமிழ்நாட்டில் கூறுவதுண்டு ,அந்தளவுக்கு சுக்கு நமக்கு நன்மை செய்யும் ,மேலும் சுக்கு மூலம் எந்தந்த நோய்களை வெல்லலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1.நம் உடல் ஆரோக்கியத்தில் பல நோய்களை குணமாக்கும் இஞ்சி ஒரு ஜீரண பெருக்கி. 
2.இது உணவுக்கு ஒரு மணத்தை கொடுப்பதோடு ஜீரண உறுப்புகளை தூண்டி நாம் உண்ணும் உணவை செரிக்க வைக்கிறது.
3. அதுபோல இஞ்சி காய்ந்து வரும் சுக்கு எந்த வகையான உணவையும் செரிக்க வைத்துவிடும். 
4.மேலும் சுக்கு சேர்த்து கொண்டால் அது நச்சுக்களை அறவே முறித்துவிடும். 
5.சுக்கு சேர்த்து கொண்டால் அது நமது குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தப்படுத்தும்..
6.உங்களுக்கு தீராத தலைவலி இருந்தால், சுக்கை நீரில் உரசி அதை நெற்றியில் பற்றாக போட்டால் தலை வலி போயிடும் .
7.உங்களுக்கு அஜீரண பிரச்சனை, வயிற்று உப்பசம், வயிற்று பெருமல், புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டால் சுக்கை பின்வருமாறு பயன் ப்படுத்தலாம் 
8. முதலில் 1 டம்ளர் நீரை கொதிக்க வைத்து, நீரில் 1 தேக்கரண்டி சுக்குப் பொடியை கலந்து உடனே மூடி வைத்திடுங்கள். 
9.அது ஆறிய பின் வெதுவெதுப்பாக உள்ள அந்த நீரில் தேன் அல்லது சர்க்கரையை சேர்த்து குடிக்க வேண்டும்.
10.இப்படி சுக்கை குடிப்பதன் மூலம் வயிற்று வலி, விலாப்பகுதியில் ஏற்படும் குத்தல், குடைச்சல், புளித்த ஏப்பம், குணமாகும் 
11.இப்படி சுக்கை குடிப்பதன் மூலம் அஜீரணக்கோளாறு, நெஞ்செரிச்சல்,  மூக்கடைப்பு, ஜலதோஷம், காதில் வலி, போன்றவை இருந்த இடம் தெரியாமல் விலகி ஓடும்.