இந்த பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் காணாமல் போகும்
பொதுவாக பயறு வகைகள் நம் உடலுக்கு நன்மை செய்யும் .அதிலும் துவரம் பருப்பை விட பாசி பருப்பு சாப்பிட்டால் நம் உடலில் பல்வேறு நோய்கள் வருவதை தடுக்கும் .அந்த வகையில் பாசி பயறு மூலம் குணமாகும் நோய்கள் பற்றி நாம் இப்பதிவில் அறியலாம்
1.கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்க எளிதில் ஜீரணமாகி பசியெடுக்கும்
2.கர்ப்பிணிகள் பாசிப்பயிரை சாப்பிப்பதால் சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். மேலும் சிலருக்கு திடீரென வரும் காய்ச்சல் குணமாகும்.
3.மேலும் சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்க ஆரோக்கியம் பிறக்கும் .
4.அதேபோல் சிலருக்கு காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்கல் வரும் இந்த நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த பொருள்
5.வெயில் காலத்தில் சூட்டு கோளாறு சிலருக்கு உண்டாகும் .மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும்.
6.சிலருக்கு ஆசன வாய்க் கடுப்பு, மூலம் வரும் .இது போன்ற நோய்களுக்கு பாசி பயறு சிறந்த மருந்தாகும்.
7.பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் காணாமல் போகும் . 8.பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் .
9.குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் பளபளக்கும்
10.பாசி பயறை தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

