பாகற்காய் தேநீர் மூலம் எந்த நோயை விரட்டலாம் தெரியுமா ?

 
pagarkai

பொதுவாக பாகற்காய் கசப்பு தன்மை உடையது என்றாலும் அது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வாரி வழங்குகிறது .குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு அது செய்யும் நன்மைகள் ஏராளம் .இந்த பாகற்காய் கொண்டு தேனீர் தயாரித்து குடிக்கலாம் .இந்த தேநீரை எப்படி தயாரிப்பது அதன் நன்மைகள் என்னெவென்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1.பாகர்க்காயை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்வோம் 
2.பின்னர் இந்த துண்டு துண்டான பாகற்காயை சுத்தமான தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 
3.. பாகற்காயின் சாறு தண்ணீரில் இறங்கும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
4.பின்னர் அந்த சாறினை வடிகட்டி எடுத்து கொள்வோம் .இப்போது  உடலுக்கு நன்மை தரும் பாகற்க்காய் டீ தயார்.
5..இந்த பாகற்காய் தேநீர் கசக்கும் .இந்த டீயில் கசப்பு தெரியாமல் இருக்க சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். 
6. இந்த பாகற்காய் தேநீரை சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை சேர்த்து கொள்ள கூடாது. 
7.இந்த பாகற்காய் தேநீர் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் நீங்கி விடும். 
8.இந்த பாகற்காய் தேநீர் மூலம் உடலில் சர்க்கரையின் அளவு சீராகும். 
9இந்த பாகற்காய் தேநீர்.கசப்புத் தன்மையை பற்றி நினைக்காமல் தொடர்ந்து இதனை குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விடும் 
10.இந்த பாகற்காய் தேநீர் மூலம் நோய் தாக்கத்தில் இருந்து தப்பித்து விடலாம்
11.இந்த இந்த பாகற்காய் தேநீர்  எந்த ஒரு பக்க விளைவும் இல்லாத ஒரு இயற்க்கை பானமாகும்.