வேப்பிலை நீரை குடித்து வந்தால், எந்த நோய்கள் ஓடிடும் தெரியுமா ?

 
neem neem

பொதுவாக வேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணம் அடங்கியுள்ளதால் அதை வெளி நாட்டிற்கே ஏற்றுமதி ஆகிறது இந்த வேப்பிலையை எப்படி யூஸ் செய்தால் எந்த நோயை குணமாக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1.ஒரு லிட்டர் தண்ணீரில் 15 முதல் 20 வேப்பிலையை போட்டு ,அது, அரைலிட்டர் ஆகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். 
2.பின்பு, அந்த வேப்பிலைகளை வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
3.இந்த வேப்பிலை தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். 
4.இதனை தொடர்ந்து இந்த வேப்பிலை நீரை குடித்து வந்தால்,நீரிழிவு நோய் படிப்படியாக குறைந்துவிடும்.
5.அடுத்து டயேரியாவிற்கு மிகச்சிறந்த தீர்வு வேப்பிலை வைத்தியம். 
6.இதற்கு, வேப்பிலையை வெறுமென சாப்பிடாமல் 10 வேப்பிலைகளை எடுத்து நன்றாக மை போல அரைத்து  மோரில் கலந்து குடித்து வந்தால் தீராத  டயேரியா கூட குணமாகி விடும் .
7.சில சாக்லேட் சாப்பிடும் குழந்தைகளுக்கு இந்த குடல் புழு பிரச்சனை இருக்கும் .இது ஏற்பட்டால் இளம் வேப்பங்கொழுந்து இலைகளை சாப்பிட கொடுக்க வேண்டும். 
8.பெரியவர்கள் இந்த குடல் புழு பிரச்சினைக்கு ,வேப்பிலைகளை தண்ணீரில் கொதிக்கவிட்டு சுண்டவைத்து குடிக்க வேண்டும்.
9.இந்த குடல் புழு பிரச்சினைக் ஒரு டம்ளர் தண்ணீரில் 5 வேப்பிலைகளை போட்டு கொதிக்க விட்டு அதனை சுண்டவைத்து குடிக்க குணமாகி விடும் . 
10.குடிக்க கஷ்டமாய் இருந்தால் அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்.