வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரையை சேர்க்க என்ன நன்மை தெரியுமா ?

 
nattu suagr

பொதுவாக நாட்டு சர்க்கரை இயற்கையான முறையில் கரும்பு சாற்றிலிருந்து தயார் செய்யப்படுவதால், இயற்கையாகவே நாட்டு சர்க்கரையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. எனவே உடலிற்கு பல நன்மைகளை தருகின்றன.இந்த வெள்ளை சர்க்கரையின் தீமைகள் பற்றியும் ,நாட்டு சர்க்கரையின் நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் நாம் காணலாம் 

1.வெள்ளை சர்க்கரையில் உள்ள சில வேதிப்பொருள்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, நீரிழிவு நோயை ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
2.உடல் ஆரோக்கியத்துக்கு வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரையை பயன்படுத்துவது நல்லது. 
3.மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெள்ளை சர்க்கரை மற்றும் இனிப்புகளை தவிர்ப்பது நல்லது.
 4.வெள்ளை சர்க்கரைக்கு  பதிலாக நாட்டு சர்க்கரையை சேர்க்கலாம். இதில் குறைந்த அளவில் கலோரிகள் உள்ளதால் உடல் எடை குறைய உதவுகிறது.
5.வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தி செய்யப்படும் இனிப்பு உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. 
6.வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரையை சேர்த்துக்கொண்டால் குடல்களை பலப்படுத்தி, மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் இருக்க உதவும்.
7.கிருமிகளால் உடலில் நோய்கள் ஏற்படாமல் காப்பது நமது உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தான். 
8.நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவக்கூடியது நாட்டு சர்க்கரை. எனவே நாட்டு சர்க்கரையை உணவில் சேர்ப்பது நல்லது.