கற்றாழைச் சோற்றுக்குள் அடங்கியுள்ள ஆரோக்கியம்

 
katrazhai katrazhai

பொதுவாக கற்றாழை நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் .உதாரணமாக 
கற்றாழையில் பல இயற்கையான தாதுக்கள் உள்ளன, உங்கள் புருவங்களுக்கு அழகிய வடிவம் கொடுக்க அவை மிகவும் உதவும். கற்றாழைச் சோற்றையும் விளக்கெண்ணெய்யையும் சம அளவு கலந்து கொண்டு தினமும் புருவங்களில் பூசினால் ,சில நாட்களில் புருவம் அழகாய் மாறும் .இதுபோல் கற்றாழையின் பல நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம் 

1.முகம் கழுவுவதற்கும்,ஃபேஸ் மாஸ்க்காகவும் கற்றாழைச் சோற்றை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்தும் பயன்படுத்தலாம் என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.  .
2.கற்றாழையில் பல வைட்டமின்களும் தாதுக்களும் உள்ளன, இது உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது .
3.மேலும் இதிலுள்ள அமிலங்களும் நொதி உடல்நலத்தை மேம்படுத்துகின்றன ..
4.கற்றாழையில் உள்ள புரோட்டியோலிட்டிக் நொதியானது, தலையின் சருமத்தில் உள்ள சேதமடைந்த செல்களை சரிப்படுத்த உதவி , முடி வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது, 
5.கற்றாழை தலையில் பொடுகு மற்றும் அரிப்பு ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது. சிறந்த கண்டிஷனராகவும் செயல்படுகிறது.
6.மேலும் இருமல் மற்றும் ஜலதொஷத்தில் இருந்து நிவாரணம் பெறவும் கற்றாழை உதவுகிறது. 
7.கற்றாழை ஒரு மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது 
8.கற்றாழையை  வறண்டுபோன, அழற்சி உள்ள சருமத்தின் மீது இதனைப் பூசினால் நோய்த்தொற்றினால் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் குறையும். 
9.கற்றாழைச் சோற்றை ஓட்மீல் மற்றும் பாடி லோஷனுடன் கலந்து பயன்படுத்தினால் மிகுந்த பலன்களைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது  
10.மேலும் கற்றாழை  இறந்த செல்களை அகற்றவும் பாதத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கவும் உதவுகிறது.

Advertisement