காராமணி பயறில் அடங்கியுள்ள ஆரோக்கியம் .
நம் உடல் ஆரோக்கியத்துக்கு பல பயறு வகைகள் விட்டமின் மாத்திரை போல ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கிறது ,பச்சை பயறு ,பாசி பயறு ,காராமணி பயறு என்று பல்வகை பயிர்கள் நமக்கு ஆரோக்கியம் கொடுப்பவை .அந்த வகையில் காராமணியில் உள்ள மருத்துவ குணம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றக் கூடிய தன்மை கராமணிக்கு உண்டு.
2.காராமணியை உணவில் சேர்த்து கொள்வோரின் வயிற்றில் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
3.இந்த காராமணியை தென் மாவட்ட மக்கள் தட்டைப் பயறு என்று அழைப்பார்கள்.
4.இவ்வளவு சக்தி வாய்ந்த காராமணியில் பொட்டாசியம் மிகவும் அதிகமாக இருக்கிறது.
5.மேலும் காராமணியில் புரதம், கலோரி, மாவுச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், ஃபோலிக் ஆசிட், கோலின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன.
6.அது மட்டுமல்லாமல் காராமணியில் தாமிரம், மெக்னீஷியம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன.
7.ஆரோக்கியம் தரும் காராமணியில் வைட்டமின் – பி காம்ப்ளெக்ஸ், பீட்டா கரோட்டின் ஆகியவை குறைந்த அளவில் இருக்கின்றன.
8.வாயுப் பிரச்னை இருப்பவர்கள் காராமணியை உணவில் சேர்த்து கொள்ள கூடாது .
9.கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு காராமணி சிறந்த உணவு
10.காராமணியில் வைட்டமின் இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.

