வெறும் தேனை குடித்தால் நம்மை விட்டு ஓடும் நோய்கள்
பொதுவாக நாம் தேனை சித்த வைத்தியத்தில் அதிகம் பயன் படுத்துகின்றனர் .தேனை இருமல் சளி மற்றும் வாயு பிரச்சினைகளுக்கு மருந்தாக ஆயுர்வேதத்தில் பயன் படுத்துகின்றனர் .இதன் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.தேனில் உள்ள குளுக்கோஸ் உடலின் எனர்ஜியை அதிகரித்து ஆற்றலை கொடுக்கும்
2. தேனில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வளர்சிதை மாற்ற நோய்க்குறியிலிருந்து பாதுகாக்கிறது.மேலும் சர்க்கரை நோய் பிரச்சனையில் நன்மை பயக்கும்.
3., தேனில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம்
4.இதுமட்டுமல்லாமல், தேன் நம் உடலில் தோன்றும் கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது.
5.தேன் உங்கள் சருமத்திற்கு இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது.
6.சளி மற்றும் இருமலுக்கு பெரும்பாலான வீட்டில் தேன் தான் பயன்படுத்துவார்கள்
7.பல அம்மாக்கள் தங்கள் வீட்டு வைத்தியத்தில் தேனை முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்துகின்றனர். 8.தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பாக்டீரியா தொற்றுக்கு எதிராக போராட உதவும்.
9. தேன் உண்பதால் சளியை நீர்த்துப்போகச் செய்து, உடலில் இருந்து நீக்குகிறது.
10.தேன் சோர்வு மற்றும் சோம்பலை குறைக்க உதவுகிறது


