பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கியமா ?
பொதுவாக நாம் உண்ணும் ஆப்பிள் பழங்களில் நிறைய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அதில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்களும் ஆப்பிளில் அடங்கியுள்ளது.எனவே பச்சை மற்றும் சிவப்பு ஆப்பிளில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் இதயம், மூளை, இரைப்பை, குடல், எலும்புகள், கண்களில் ஏற்பட்ட பல நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
2.பச்சை மற்றும் சிவப்பு என்ற இரண்டு ஆப்பிளிலும் புரதம், வைட்டமின், தாதுப்பொருட்கள் அடங்கியுள்ளன.
3. சர்க்கரை நோயாளிகள் சிவப்பு ஆப்பிளை விட, பச்சை ஆப்பிளை தாராளமாக சாப்பிட ஆரோக்கியம் கிடைக்கும் .
4., சிவப்பு ஆப்பிளை விட, பச்சை ஆப்பிளில் சர்க்கரை அளவு குறைவு என்பதால் சுகர் பேஷண்டுகளுக்கு நன்மை உண்டு
5.மேற்கூறிய காரணத்தால் சர்க்கரை நோயாளிகள் பச்சை ஆப்பிளை சாப்பிடலாம்.
6.. சிலருக்கு ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உடலில் அதிகரிக்க வேண்டும் என்றால் பச்சை ஆப்பிளை விட சிவப்பு ஆப்பிளை அவர்கள் சாப்பிடலாம்
7. மேலும் ஆஸ்துமா பிரச்சினை இருப்பவர்கள் சிவப்பு ஆப்பிளை விட பச்சை ஆப்பிளை சாப்பிடலாம்.
8.ஏனென்றால், பச்சை ஆப்பிளிலில் ஃப்ளாவனாய்டுகள் அதிகம் உள்ளதால் இவை நுரையீரலை பலப்படுத்தி ,ஆஸ்துமாவிலிருந்து நம்மை குணப்படுத்தும்.
9. மேலும் சிலருக்கு செரிமானப் பிரச்சினை இருக்கும் .இப்படி இருப்பவர்கள் இரண்டு ஆப்பிளையுமே சாப்பிடலாம்.
10.மேலும் இரண்டு ஆப்பிளிலிலும் ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது .அதனால் இவை செரிமான சக்தியை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சினையை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது
11. மேலும் ஒருவருக்கு கால்சியம் சத்து அதிகமாக வேண்டும் என்றால், அவர்கள் சிவப்பு ஆப்பிளை விட பச்சை ஆப்பிளை சாப்பிட ஆரோக்கியம் உண்டாகும்
12.. சிலருக்கு உடல்எடையை அதிகமிருக்கும் .இந்த உடல் குறைக்க வேண்டும் என்றால் தாராளமாக அவர்கள் பச்சை ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

