திராட்சைப்பழ ஜூஸைத் காலையில் சர்க்கரை சேர்க்காமல் குடித்துவர இந்த நோய்களை விரட்டலாம்
பொதுவாக பழங்களில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளது .இந்த பழங்களில் லெமன் ,மாதுளை ,பப்பாளி ,திராட்சையில் ஏராளமான மருத்துவ குணம் அடங்கியுள்ளது .இந்த நாலு பழங்களில்
மிக மிகக் குறைவான கலோரி பப்பாளியில்தான் உள்ளது.கண் பிரச்னையிருப்போர், பார்வைக் குறைபாடு, வறண்ட சருமத்தினர், உடல்பருமானவர், ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிட ஏற்றது.இதுபோல மற்ற பழங்களில் உள்ள நன்மைகள் குறித்து இந்த பதிவில் பாக்கலாம்
1.எப்போதும் எலுமிச்சை ஜூஸைத்தான் பலரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
2.லெமன் ஜூஸில் உள்ள வைட்டமின் பி, சி உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சருமத்தை அழகாக வைத்திருக்க உதவும்.
3.லெமன் ஜூஸ் செரிமானத்தையும் அதிகரித்து , புற்றுநோயைக் குணப்படுத்தக் கூடிய வல்லமை கொண்டது.
4.அசைவ உணவு சாப்பிட்ட பிறகு இந்த லெமன் ஜூஸ் குடிக்கலாம். தொண்டை வலி, புண் இருப்பவர்கள், மயக்கம் வரும் பிரச்னை இருப்பவர்கள், புத்துணர்ச்சி பெற என அனைவருமே குடிக்கலாம்.
5.அடுத்து திராட்சை பழ ஜூஸ் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் .பெண்கள் இதனை அருந்தலாம். 6.திராட்சைப்பழ ஜூஸைத் தொடர்ந்து காலையில் சர்க்கரை சேர்க்காமல் குடித்துவர, ஒற்றைத் தலைவலி குணமாகும்.
7.திராட்சை பழ ஜூஸ் ஆஸ்துமாவையும் குணப்படுத்தக்கூடியது. திராட்சை பழ ஜூஸ் நுரையீரலுக்கும் நல்லது.
8.திராட்சை பழ ஜூஸ் மார்பகப் புற்றுநோயாளி, புற்றுநோயாளிகள் என அனைவருமே அருந்தலாம். திராட்சை பழ ஜூஸ் இதய நோயாளிகள் அளவுடன் குடிக்க வேண்டும்.
9.அடுத்து மாதுளம்பழச் சாறு பற்றி பார்க்கலாம் .தினமும் ஒரு கப் மாதுளம்பழச் சாறு குடித்துவர, பதினைந்து நாட்களில் டெஸ்டோஸ்டீரான் சுரப்பின் அளவு அதிகரிக்கும்.
10.மாதுளம்பழச் சாறு பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டால், கர்ப்பப்பை, சினைப்பைப் பிரச்னைகள் குணமாகும். சருமத்துக்கு நல்லது.
11.அடுத்து பப்பாளிப்பழ ஜூஸ் பற்றி பார்க்கலாம் .பப்பாளிப்பழ ஜூஸ் உடல் நலனுக்கு உகந்தது. பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், தாமிரம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நார்ச்த்துக்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் இருப்பதால் நம் ஆரோக்கியம் காக்கும்


