இஞ்சி அடிக்கடி சேர்த்து கொண்டால் எந்தெந்த நோய் வராது தெரியுமா ?
பொதுவாக பல நோய்களுக்கு மருந்து நம் வீட்டு கிச்செனிலேயே இருக்கிறது .ஆனால் நாம் அதை விடுத்து நோய்களுக்கு மருந்து தேடி பல இடங்களுக்கு சென்று பணம் செலவு செய்கின்றோம் .அந்த வகையில் நம் வீட்டு கிச்செனில் சமையலில் சேர்க்கும் இஞ்சி எந்த வகை நோயிலிருந்து நம்மை காக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.பொதுவாக இஞ்சியை அதிகாலையில் உட்கொள்வதால் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
2.அந்த அதிகாலையில் டீ மற்றும் வெந்நீருடன் சேர்த்து இஞ்சி சாப்பிடலாம் .அந்த இஞ்சி, குமட்டல் மற்றும் காலை சோம்பலை போக்கும் ..
3.மேலும் இந்த இஞ்சியுடன் , பால், மஞ்சள் மூன்றையும் சேர்த்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
4.பொதுவாக காலை உணவில் சிறிது இஞ்சி சேர்த்துக் கொண்டால், வாதநோய் வராமல் தடுக்கலாம் ,
5.மேலும் இஞ்சி அடிக்கடி சேர்த்து கொண்டால் மூட்டுவலி குறையும்.
6.இஞ்சியை அப்படியே உண்ணாமல் இஞ்சி சாறு குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தும்.
7.இந்த இஞ்சி சாறு மூலம் வாயுத்தொல்லை போன்றவற்றில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.

