காலையில் இஞ்சி நீர் பருகினால், எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா ?
பொதுவாக இஞ்சி நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது .அதனால் இஞ்சியை இஞ்சி துவையலாகவோ அல்லது இஞ்சி சட்னியாகவோ அல்லது இஞ்சி குழம்பு வைத்து சாப்பிடலாம் .எனவே இந்த மருத்துவ குணமுள்ள இஞ்சி மூலம் நாம் பெரும் நன்மைகளை பார்க்கலாம்
1.இஞ்சி உணவில் சேர்த்து கொண்டால் நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராக வைக்கவும் உதவுகிறது.
2.இஞ்சி உணவில் சேர்த்து கொண்டால் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
3.இஞ்சியை காலையில் சாப்பிட்டால் உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்க வைக்கிறது
4.இஞ்சி உணவில் சேர்த்து கொண்டால் பசியுணர்வு அதிகரிக்கும்.
5.சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவினால், ஒற்றைத் தலைவலி ஓடி போய் விடும்
6.நீரில் சிறிது இஞ்சியை கொதிக்க வைத்து ,எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க, நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள சளி முறிந்து, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
7.பல் வலி இருக்கும் போது, இஞ்சி துண்டை ஈறுகளில் மசாஜ் செய்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். 8.இல்லாவிட்டால், நீரில் இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் வாயைக் கொப்பளிக்க பல் வலி பறந்து ஓடி விடும் .
9.இஞ்சி குமட்டல் மற்றும் வாந்தி வருவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, காலையில் ஏற்படும் சோர்வையும் இஞ்சி தடுக்கும்.
10.இஞ்சியைத் தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து பருக செரிமான பிரச்சனைகள் அகலும்.
11.அதிலும் காலையில் இஞ்சி நீர் பருகினால், உங்கள் செரிமான மண்டலம் சுத்தமாகி, அதன் செயல்பாடு அதிகரிக்கும்

