இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் எண்ணெய்

 
oil

பொதுவாக எண்ணெய் வகைகளில் அதிகமாக சேர்க்காமல் அளவோடு சேர்த்து கொண்டால் நம் உடலுக்கு நன்மை செய்யும் .அதிலும் நல்லெண்ணெய்  நம் உடலுக்கு நன்மை செய்வதால்தான் அதற்கு நல்லெண்ணெய் என்று பெயர் வந்தது .இந்த நல்லெண்ணெய்  மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் மருத்துவ குணம் பற்றி நாம் இந்த பதிவில் காணலாம் 

1.நல்லெண்ணெய்யில் மக்னீசியம் உள்ளதால், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். 
2. நீரிழிவு நோயாளிகள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்கள் நல்லெண்ணெய்யை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.
3.தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெய்யை 15 முதல் 20 நிமிடங்கள் வாயில் வைத்து நன்றாக அலசி வாயை கொப்பளித்தால் பல நன்மைகள் உண்டு  
4.நல்லெண்ணெய் மூலம் வாய் கொப்பளிக்க பற்களில் தங்கியிருக்கும் கிருமிகள் மற்றும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.
5.எள் எண்ணெய்யில் பைட்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் நிறைந்துள்ளது. 
6.நல்லெண்ணெயை  உணவில் சேர்க்கும் போது, உடலில் பாதிக்கப் பட்ட புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
7.நல்லெண்ணெய்யில் ஜிங்க் சத்து நிறைந்துள்ளதால் சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தின் முக்கிய பொருளான கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். 
8. கர்ப்பிணிகள் வயிற்றில் நல்லெண்ணெய் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.