தேனில் ஊறவைத்த பூண்டை உண்பதால் என்ன நன்மை தெரியுமா ?

 
Health Benefits of Garlic

பொதுவாக பூண்டு நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்க கூடியது ,இதை பின்வருமாறு சாப்பிட்டால் பலன் அதிகம் 
தேவையான அளவு பூண்டு எடுத்து  கண்ணாடி பாட்டிலில் அதனைப் போட்டு பூண்டு மூழுகும் அளவுக்கு தேன் ஊற்றவேண்டும். குறைந்தது ஒரு நாள் முழுவதுமாவது பூண்டு தேனில் ஊறவைத்து அதை உண்பதால் கிடைக்கும் பலனை இந்த பதிவில் பார்க்கலாம் . 

1.தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் அளவுக்கு தேனில் ஊறவைத்த பூண்டை  சாப்பிட்டு வந்தாலே போதுமானது. 
2.தேனில் ஊறவைத்த பூண்டை உண்பதால் பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்று நோய்கள், காயங்கள் போன்றவற்றை தவிர்க்க முடியும்.
3. தேனில் ஊறவைத்த பூண்டு  இன்ஸுலின் சுரப்பை அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.
4.தேனில் ஊறவைத்த பூண்டில் ‘அலிசின்’ என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 
5.தேனில் ஊறவைத்த பூண்டு  இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதில் பூண்டு முதன்மையானது. 
6.தேன் மற்றும் பூண்டு இரண்டிலுமே கொழுப்பை கரைக்ககூடிய ஆற்றல் இருக்கிறது. 
7.தேனில் ஊறவைத்த பூண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் அதில் இருக்கும் என்சைம்கள் நம் உடலுக்குள்ளும் சென்று கொழுப்பை கரைத்திடும்.
8.உடலில் போதுமான ரத்த அளவு இல்லாமல் இருப்பவர்களுக்கு தேனில் ஊறவைத்த பூண்டு ஒரு வரப்பிரசாதமாகவே விளங்குகிறது. 
9.தேன் ரத்தம் விருத்தியடையச் செய்கிறது. 
10.தினமும் வெறும் வயிற்றில் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். 11.சிலருக்கு உடல் வறட்சியாலோ அதிக சூட்டினாலோ இருமல் வரும். 
12.அவர்கள் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைத்திடும்.