இதய ஆரோக்கியத்திற்கு இது சிறந்த உடற்பயிற்சி.
பொதுவாக இன்றைய நவீன உலகில் பைக் வந்த பின்னர் சைக்கிள் ஓட்டுவதே இல்லை .அந்த காலத்தில் அனைவரும் சைக்கிள் ஓட்டி வந்ததால் ஆரோக்கியமாக இருந்தனர் .ஆனால் இப்போது பைக் வந்த பின்னர் சைக்கிள் ஓட்டாமல் ஆரோக்கியமின்றி இருக்கின்றனர் .எனவே இந்த பதிவில் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் நம் உடல் அடையும் பயன்கள் பற்றி காணலாம்
1.இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் ஒரு பெரும் பிரச்சனையாகி வருகிறது.
2.இந்த பிரச்சனையை நாம் தீர்க்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி மிகவும் அவசியம். அதில் முக்கிய பங்கு வகிப்பது சைக்கிள் ஓட்டுதல்.
3.சைக்கிள் ஓட்டும்போது இதய ஆரோக்கியத்திற்கு ஒரு வகையான உடற்பயிற்சியாகவும் ரத்த நாளங்களின் ஆபத்தையும் இது குறைத்து நல் வழி வகுக்கிறது.
4.நம் உடலில் உள்ள கலோரிகளை குறைப்பதற்கு சைக்கிள் ஓட்டுவது இதுவரை பெஸ்ட் சாய்ஸ் ஆக உள்ளது. 5.சைக்கிள் ஓட்டும்போது12% எடையை 6 மாதத்தில் வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
6.சைக்கிள் ஓட்டுவதன் மூலம் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்
7.சைக்கிள் ஓட்டும்போது தசைகளை வலுப்படுத்தும்.சைக்கிள் ஓட்டும் போது கால்கள் மேலிருந்து கீழாக வட்டமாக நகரும்.
8.இதனால் தசைகள் நன்கு வலுப்பெற்று நம் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
9.மேலும் இரண்டு மணி நேரம் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் புற்றுநோயை குறைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
10.ஆகையால் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் நம் உடல் மற்றும் மன தளவில் உறுதியை ஏற்படுத்துகிறது.

