தொடர்ந்து தயிரை முடியில் தடவி வந்தால் என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக தயிரில் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளது .அதனால் நம் உடலையும் தலை முடியையும் தயிர் மூலம் எவ்வாறு பாதுகாக்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
தலைமுடி அதிகமாக வளர தயிரை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1.கூந்தல் பிரச்சனை இருப்பவர்களுக்கு தயிர் மிகவும் சிறந்ததாக இருக்கும்.
.2.மேலும் தயிர் முடி உதிர்வது மற்றும் பொடுகு பிரச்சனையை நீக்கி முடியை நன்றாக வளர உதவுகிறது.
3.3 வாரம் தொடர்ந்து தயிரை முடியில் தடவி வந்தால் முடி உதிர்தல் பிரச்சனை நீங்கும். மேலும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
4.முடி உதிர்வதற்கு பொடுகு ஒரு காரணம். காலையில் தினமும் தடவி வந்தால் வேர்க்கால் வலுவடைந்து பொடுகு பிரச்சனையிலிருந்து முற்றிலும் விடு பட முடியும்.
5.தயிரில் அதிகமாக புரோட்டின் உள்ளதால் தலைமுடி மென்மையாக இருக்கவும் பளபளப்பாக இருக்கவும் உதவுகிறது.
6.முதலில் தலைமுடியை சுத்தம் செய்து நன்றாக காய வைத்த பிறகு தயிரை எடுத்து முடியை பிரித்து கையில் முடியின் வேர்களில் தடவி வர வேண்டும்.
7.பிறகு நன்றாக காய வைத்து சாதாரண நேரில் கழுவி விட வேண்டும்.
8.இப்படி தடவி வந்தால் முடி உதிர்வது பொடுகு பிரச்சனையிலிருந்து நீங்கி முடி மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்
.

