கிராம்பு டீக்குள் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள்
பொதுவாக கிராம்பு நம் உடல் நலத்திற்கு நன்மை செய்ய கூடியது .இந்த கிராம்பு உஷ்ணத்தன்மை வாய்ந்ததும் கூட .இந்த கிராம்பை கொண்டு தேநீர் தயாரித்து குடித்தால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் .இந்த கிராம்பு டீ எப்படி தயாரிக்கலாம் என்று இந்த பதிவில் நாம் காணலாம்
1.பொதுவாக ஆரோக்கியம் தரும் கிராம்பு டீ உடல் எடையை குறைக்க உதவும்.
2.கிராம்பு டீ யில் உள்ள மூலப்பொருட்கள் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
3.கிராம்பு டீ வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி கொழுப்பை எரிக்க உதவுகிறது.
4.கிராம்புகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிக அளவில் காணப்படுகின்றன.
5.கிராம்பு டீ தயாரிக்க தேவையான பொருட்கள்
6.கிராம்பு - 2-3,இஞ்சி - 1 இன்ச் (துருவியது),தண்ணீர் - சுமார் 200 மிலி
7.கிராம்பு டீ தயாரிக்க கிராம்பை இரவு முழுவதும் அல்லது சுமார் 6 மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
8.பின்னர் கொதிக்க விடவும்.அதனுடன் இஞ்சியையும் சேர்க்கவும்.
9.இதனுடன் எலுமிச்சை சாறும் சேர்க்க கிராம்பு டீ தயார் .
10.இந்த ஆரோக்கியம் மிக்க கிராம்பு டீ யை தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் குடிக்கவும்.


