ஆண்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா ?

 
apples

பொதுவாக நம் ஆரோக்கியத்துக்கு பழங்கள் பேருதவி புரிகின்றன .அந்த வகையில் ஆப்பிள் சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று பாக்கலாம் .ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி நிறைய உண்டு . அதுவும் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளக்கியிருப்பதால், இதனை தினமும் சாப்பிடுவது நன்மை செய்யும் . ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது மாயமாய் மறையும் .

1.ஆப்பிள் மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள். சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது.
2.ஆப்பிள் சாப்பிடுவதால் குடற்கிருமிகளை அழிக்க உதவுகிறது. 
3.சில குழந்தைகளுக்குப் பேதி போகும் .இப்படி பேதி கண்டால் ஆப்பிள் பழத்தை ஆவியில் வேகவைத்து பிசைந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு குணமாகும். 
4. பெரியவர்களுக்கும் பேதி கண்டால் இப்படி ஆப்பிளை வேக வைத்து கொடுக்கலாம் ..
5.ஒவ்வொரு ஆப்பிள் பழமும் இதய நோயாளிகளுக்குச் சிறந்த உணவாகிறது. 
6.சிலருக்கு நரம்புத் தளர்ச்சி இருக்கும் .இது நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் சாப்பிடுவதால் மிகுந்த நன்மை கிடைக்கிறது.
7.சில ஆண்கள் திருமண வயதை எட்டிய நிலையில் இருப்பர் .இப்படி உள்ள ஆண்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் ஆண்மைபலம் விருத்தியடையும்.
8.140 கிராம் எடை கொண்ட ஒரு ஆப்பிளில் 90 கலோரிகளே உள்ளன.அதனால் எடை குறைப்புக்கும் வழியுண்டு 
9.ஆப்பிளை அப்படியே உண்ணலாம். சமைத்து உண்பதும் உண்டு. நறுக்கி வேகவைத்து உண்ணலாம். 
10.அதனால் ஆப்பிளின் ஆரோக்கியம் பெற வறுத்து மொறுமொறுவென்றும் உண்ணலாம்