கசப்பான பாகற்காயில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள்

 
pagarkai pagarkai

பொதுவாக கசப்பான பாகற்காயில் நம் உடலுக்கு நன்மை செய்யும் ஆற்றல் ஏராளமாய் உள்ளது .இனிப்பான பொருள் நமக்கு கேடு உண்டாக்குவது போல ,கசப்பான பொருள் நம் உடலுக்கு நன்மை செய்யும் .இனி இந்த ப்பதிவில் பாகற்காயில் உண்டாகும் நன்மை பற்றி பார்க்கலாம் 
1.சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் திறனுக்காகப் பாகற்காய் பயன்படுகிறது. 
2.பாகற்காயில் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றம் மற்றும் இன்சுலின் உணர்திறனைக் கட்டுப்படுத்த உதவும் சேர்மங்கள் நிறைய  உள்ளன. 
3.கசப்பு மிகுந்த பாகற்காய் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும், இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
4.பாகற்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். 
5.ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் கேன்சர் செல்லை உருவாக்கும் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன, .
6.பாகற்காயில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது . 
7.பாகற்காயில் உள்ள நார்ச்சத்து, அதிகம் உண்பதையும், சிற்றுண்டி சாப்பிடுவதையும் தடுக்கும்.
8.பாகற்காய் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும்.
9. பாகற்காயில் குடலில் உள்ள கொழுப்பின் உறிஞ்சுதலைக் குறைக்க உதவும் கலவைகள் இதில் உள்ளன, 
10.பாகற்காயில்  இரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைக்க வழிவகுக்கும் ஆற்றல் உள்ளது