காலை வேளையில் முட்டை சாப்பிட எந்த நோயை தடுக்கலாம் தெரியுமா ?

 
egg egg

பொதுவாக நம் இதயத்திற்கு கேடாக வருவது கெட்ட கொலஸ்ட்ரால் .இந்த கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேராமல் பல உணவு பொருட்கள் தடுக்கும் 
அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை என்பது பரம்பரையாக வரக்கூடியது என்றாலும் இது பெரும்பாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளிலேயே வரும்.  எந்த உணவுகளை காலை வேளையில் சாப்பிட கொழுப்பு வராது என்று இந்த பதிவில் பார்க்கலாம் 
1. அதிக கொலஸ்ட்ரால் வருவதை தடுக்க ஓட்ஸ் உணவுகள் சேர்த்து கொள்ளலாம் 
2.இந்த ஓட்ஸை மாம்பழம், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி அல்லது வாழைப்பழம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட கொலஸ்ட்ராலை தடுக்கலாம் .
3.அதிக கொலஸ்ட்ரால் வருவதை தடுக்க காலை வேளையில்  முட்டை சாப்பிடலாம் 
4.இந்த முட்டையை வேகவைத்த முட்டை, முட்டை சாண்ட்விச், முட்டை சாலட், காய்கறிகளுடன் ஆம்லெட் ஆகியவை சேர்த்து காலையில் சாப்பிட  கொலஸ்ட்ராலை தடுக்கலாம் .
5. அதிக கொலஸ்ட்ரால் வருவதை தடுக்க பெர்ரி பழங்கள் எடுத்து கொள்ளல் நலம் 
6.இந்த பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆகவே இதை சாப்பிட்டு வந்தால் கொழுப்பு உருவாகாது .
7. அதிக கொலஸ்ட்ரால் வருவதை தடுக்க கிரீக் யோகர்ட் காலையில் சாப்பிடலாம் 
8.இதில் உள்ள புரதம் மற்றும் புரோபயாடிக்குகள் நிறைந்த தயிர் உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொழுப்பு சேராமல் தடுக்கும்