இதையெல்லாம் அடிக்கடி சாப்பிடுவோரின் இதயத்தில் கெட்ட கொழுப்பு சேரவே சேராது

 
heart failure

 நம் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதை தடுக்கும் முக்கிய உணவுகளை பற்றி காண்போம் .

பாதாமில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம், நார்சத்து, ப்ரோடீன், ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.இது உங்கள் உடலில் சேரும் தேவையற்ற கெட்ட  கொழுப்பினை கரைக்க உதவும்

padham

மீன் எண்ணையில் அதிக அளவில் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளதால் , உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் மற்றும் ட்ரிஜிலிசெரிட்ஸ் போன்றவற்றினை குறைக்க உதவும்.

தினமும் க்ரீன் டீ குடித்து வந்தால் உங்கள் உடலில் உள்ள கேட்ட கொழுப்பினை கரைக்க உதவும். மேலும் இதில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளதால் உங்களின் உடலில் ஏற்படும் செல் அழிவினை தடுத்து உங்களை எப்போதும் இளமையுடன் வாழ வழி செய்யும்.

கீரை வகை உணவுகள் உங்கள் உடலில் கொழுப்பு சேராமல் தடுப்பதில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. கீரை வகை உணவுகளில் நார்சத்து அதிகம் உள்ளதால் இவை உங்கள் உடலில் கொழுப்பினை சேராமல் தடுக்கும். எனவே முடிந்த அளவு தினமும் உங்கள் உணவில் கீரையினை சேர்த்து வாருங்கள் நண்பர்களே.

கீரை உணவினை இரவு நேரத்தில் தடுப்பதை தவிர்த்திடுங்கள். இரவு நேரத்தில் கீரை உணவுகளை சேர்த்து வந்தால் உடலுக்கு அவ்வளவாக நல்லது இல்லை என பலவித ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மஞ்சளை தினமும் உங்கள் உணவு பட்டியலில் சிறிதளவு சேர்த்து வந்தால் உங்கள் உடலில் சேரும் கேட்ட கொழுப்பு அறவே தடுக்கப்படும். எனவே மஞ்சளினை உங்கள் உணவில் சேர்த்து வாருங்கள் நண்பர்களே.

பச்சை காய்கறிகளில் பைட்டோ  நூற்றிஎன்ட்ஸ் அதிக அளவில் நிறைந்துள்ளது. பொதுவாகவே பழங்கள் மற்றும் காய்கறிகளில் இயற்கையாகவே நார்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. இவற்றை நீங்கள் உண்டு வரும்போது உங்கள் உடலில் கேட்ட கொழுப்பு சேராமல் தடுக்கப்படுகின்றது.