இந்த ஐந்து பழக்கங்களை விட்டவங்க கிட்ட ,கெட்ட கொலஸ்ட்ரால் வராது

 
cholestral

நம் உடலில் இருக்கும் கொழுப்புச் சத்து பற்றி எல்லாருக்கும் தெரிந்து இருக்கும். கொழுப்புச் சத்தம் நம் உடலின் பல செயல்பாடுகளுக்கு துணை புரிகிறது. இருப்பினும் இந்த கொழுப்புச் சத்து அதிகமானாலோ அல்லது இல்லாமல் போனாலோ நாம் பல வித உடல் நல பாதிப்புகளை சந்திக்க நேரிடலாம். இந்த கொலஸ்ட்ரால் சத்து குறித்து மக்களிடையே நிறைய கட்டுக்கதைகளும் நிலவி வருகிறது.

கொலஸ்ட்ரால் குறித்த புரிதல் மக்களுக்கு தவறாகவே உள்ளது. கொழுப்புச் சத்தை எடுத்துக் கொண்டாலே உடலுக்கு நோய் வந்து விடும் என்று மக்கள் அஞ்சுகின்றனர். ஆனால் கொழுப்புச் சத்து உண்மையில் உடலுக்கு மிக அவசியமான ஒன்று. இதை எந்தளவுக்கு எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொருத்தே பல விஷயங்கள் அமைகின்றன. 

ஆரோக்கியமான செல்களை உருவாக்க உடலுக்கு நல்ல கொலஸ்ட்ரால் தேவை, ஆனால் சில சமயங்களில் மோசமான உணவுப் பழக்கத்தால் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது, இதனால் மாரடைப்பு உட்பட பல வகையான இதய நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது. உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கக் காரணமான சில பழக்கங்களை விரைவில் விட்டுவிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. அவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.

1. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்

உங்கள் தினசரி உணவில் அதிகப்படியான நிறைவுற்ற அல்லது டிரான்ஸ் கொழுப்பைச் சேர்த்தால், கெட்ட கொலஸ்ட்ரால் வேகமாக அதிகரிக்கிறது. இந்த வகை கொழுப்பு இறைச்சி கொழுப்பு,  பால் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் இனிப்புகளில் காணப்படுகிறது. இதய நோய்கள் வராமல் இருக்க வேண்டுமானால், இன்றே இத்தகைய உணவுப் பழக்கங்களைத் தவிர்க்கவும்.

2. உடல் பருமன்

உங்கள் எடையை குறைப்பது பற்றி கவனம் செலுத்தாமல், இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு வேகமாக அதிகரித்துக் கொண்டே இருந்தால், மிகவும் விழிப்புடன் இருங்கள். உங்கள் உயரத்திற்கு ஏற்ப எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை நிபுணர்களிடம் கண்டறிந்து, அதை பராமரிக்கவும். உடல் பருமன் பல நோய்களுக்கு மூல காரணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

3. உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல்

தற்போதைய காலகட்டத்தின் பிஸியான வாழ்க்கை முறையால், மக்கள் உடற்பயிற்சி செய்வதற்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை, ஆனால் கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்றால், ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது ஒட்டுமொத்த உடற்தகுதியை பராமரிக்கவும் உதவும்.

4. புகைபிடித்தல்

சிகரெட் ரிங் செய்து ஸ்டைலாக அடிப்பதில் இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும், இந்த விஷயம் பிற்காலத்தில் தவிர்க்க முடியாத பழக்கமாகி விடுகிறது. இந்த அடிமைத்தனத்தால், உடலில் நல்ல கொலஸ்ட்ரால் குறையத் தொடங்குகிறது.

5. மது அருந்துதல்

குடிப்பழக்கம் எந்த மனிதனையும் அழித்துவிடும். இது கல்லீரலை சேதப்படுத்துவது மட்டுமின்றி, கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கும் முக்கிய காரணமாகிறது. இந்த கெட்ட பழக்கத்தை எவ்வளவு சீக்கிரம் கைவிட்டு விடுகிறீர்களோ, அந்த அளவிற்கு உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது