இனி முதுகு வலி வந்தால் மாத்திரை வேணாம் ,இந்த வைத்தியம் போதும்

 
back pain

 

இன்றைக்கு இந்த கணினி யுகத்தில் பலரை பாடாய் படுத்தி வரும் நோய்களில் முதுகு வலியும் ஒன்று ஆகும் .இந்த முதுகு வலிக்கு மருந்து மாத்திரைகள் தற்காலிக நிவாரணம்தான் கொடுக்கும் .நம் வீட்டில் உள்ள பொருளை கொண்டு இந்த முதுகு வலியை ஒரு வழி பண்ணலாம் வாங்க ...

body pain tips

 

1.அரை கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு ஓமம் மற்றும்  தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி கொண்ட பிறகு ,அதோடு  கற்பூரப் பொடியை சேர்த்து முதுகு வலி உள்ள இடத்தில் தேய்க்க முதுகு வலி பஞ்சாய் பறந்து போகும் ..

2.சூடான நல்லெண்ணை மற்றும் உப்பு சேர்த்து முதுகில் மசாஜ் செய்தால் வலி குறையும்.பின்னர் வலியின்றி நிம்மதியாக இருக்கலாம் 

3.தண்ணீரை மிதமான சூடாக்கி அதில் சிறிது யூக்கலிப்டஸ் தைலம் ஊற்றி கலந்து அதில் குளித்து வந்தால் முதுகுவலி முதல்  உடல் வலி வரை நம் உடலை விட்டு ஓடியே போய் விடும்

4. உங்கள் முதுகில் கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும். பின்னர், வெந்நீரில் குளித்து வந்தால் இந்த வலி வந்த வழியே போய் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் .

5.ஆமணக்கு எண்ணெயை (விளக்கெண்ணெய்) சூடாக்கி, உங்கள் முதுகில் மசாஜ் செய்யவேண்டும். அதை இரவு முழுவதும் அப்படியே விட்டால் ,முதுகு வலி நம்மை விட்டு விட்டு போய் விடும் .

6.வீட்டில் தேநீர் தயாரிக்கும் போது இஞ்சியைச் சேர்த்து தயாரிக்கவும், இது முதுகுவலியின் வாய்ப்புகளைக் குறைக்க உதவி ,உடலில் வாயு பிடிப்பு போன்ற முதுகு வலியை காணாமல் போக செய்யும்