பிபி அதிகமாகி கத்துறவங்களை கூட அமைதியாக்கும் சக்தியுள்ள இந்த பழத்தின் அருமை தெரியுமா ?

 
bp

உலர் அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே தினமும் 3 அல்லது 4 அத்திப்பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் கிடைக்கின்றது.இதனால் செரிமான பிரச்சனைகள் நீங்கும். மேலும் இதனால் பசியின்மை பிரச்சனையும் நீங்கும்

அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. சிறுநீரகத்தில்  கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது. பெருங்குடலில் ஆங்காங்கே, இறுகிய கழிவுப் பொருட்களை பக்குவப்படுத்தி, இளக்கி, வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது.


தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

webdunia

வைட்டமின் சத்து:

அத்திப்பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் ஈ சத்துகள் அதிகம் உள்ளது. மேலும் மற்ற பழங்களை இந்த அத்திபழத்தில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் உள்ளது. இதனால் இந்த அத்திப்பழத்தை நாம் அடிக்கடி சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும்.மேலும் நம் உடலுக்கு ஆற்றலும் தரும்.

இரத்த அழுத்தம்:

நம்முடைய உடலில் சேர்த்து கொள்ளவும் உப்பின் அளவு அதிகமா இருந்தால் அது சோடியத்தின் அளவை அதிகரிக்கும்(dry fig fruit benefits in tamil). இதனால் நம்முடைய உடலில் உள்ள பொட்டாசியத்தின் அளவு குறிக்கியது, எனவே நமக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கு அத்திப்பழம் நல்ல தீர்வாக இருக்கும். தினமும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் அதில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் இந்த இரத்த அழுத்தம் பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்.

புற்றுநோயை தடுக்கும்:

அத்தி பழத்தில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் இருப்பதால் அது புற்றுநோய்க்கு ஒரு நல்ல மருந்தாக இருக்கும். நம்முடைய உடலில் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை இது தடுத்து நம்மை பாதுகாக்கிறது. எனவே இனிமேல் மார்க்கெட் சென்றால் இந்த அத்திப்பழத்தை மறக்காமல் வாங்கி தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தரும்.

இதய நோய் வராது:

இந்த அத்தி பழத்தில் அதிகளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் இருப்பதால் இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சரி செய்கிறது(dry fig fruit benefits in tamil). இதனால் இதயத்திற்கு சீராக இரத்தம் செல்கிறது.எனவே நமக்கு இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் பார்த்து கொள்ளலாம்.இனிமேல் தினமும் ஒன்று இல்ல இரண்டு அத்தி பலன்களை சாப்பிடுவது நம் இதயத்திற்கு மிகவும் நல்லது.

எலும்புகளை வலிமையாக்கும்:

தினமும் அத்திப்பழத்தை சாப்பிடுவதால் அது நம்முடைய உடலில் உள்ள எலும்புகளுக்கு நல்ல வலிமையை தருகிறது.ஒரு அத்தி பழத்தில் 3% கால்சியம் உள்ளது. இது நம் உடலுக்கு ஒரு நாளைக்கு தீயன கால்சியத்தின் அளவாகும். எனவே இது எலும்புகளுக்கு நல்ல வலிமையை தருகிறது.