வீட்டு வாசலில் அரச மரமிருந்தா, ஆயுளுக்கும் மருத்துவமனை பக்கம் போக வேணாம் .

 
arasa maram health tips arasa maram health tips

அரச மர இலைகள் மற்றும் பட்டைகள் ஆகியவை கைவைத்தியத்தில் முக்கியபங்கு வகிக்கின்றன.

பித்த வெடிப்பிற்கு இயற்கை அளித்துள்ள மருந்துகளில் அரசு மரத்துப்பால் மிகச்சிறந்தது .அரச மரத்தைக் குத்துவதால் வடியும் பாலினை பாதங்களில் உள்ள பித்த வெடிப்புகளில் தடவி வந்தால் குணமாகுமாம்.

காய்ச்சல்

அரசமர இலைகளை பாலில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் காய்ச்சல் விரைவில் குணமாகும்.

மலத்தில் ரத்தம்

அரசமரம், ஆலமரம், அத்திமரம் இந்த மூன்று மரத்தில் உள்ள கொழுந்து இலைகளை சம அளவு எடுத்து தண்ணீரில் போட்டு காய்ச்சி சர்க்கரை கலந்து குடித்து வந்தால் மலத்தில் ரத்தம் போவது நிற்கும்.

மலட்டுத்தன்மை

அரச மரத்தின் இலையை காயவைத்து பொடி செய்து அதனை தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கும்.

ஆஸ்துமா

அரசமரத்தின் காய் மற்றும் இலைகளை காயவைத்து பொடி செய்து அதனை தண்ணீரில் கலந்து 14 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள் காமாலை

இளஞ்சிவப்பான அரசமர இலைகளில் சாறு எடுத்து அதில் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள் காமாலையின் பாதிப்பை தடுக்கலாம்.

வயிற்று கடுப்பு

அரசமரத்தின் கொழுந்து இலைகளை எடுத்து மை போல அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று கடுப்பு சரியாகும்.

சர்க்கரை நோய்

அரசமர காய் பொடி, கடுக்காய் பொடி இரண்டையும் சம அளவு எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

arasa-ilai

அரசு இலைக் கொழுந்த ஒரு கைப்பிடி அளவு எடுத்து பால்ல வேகவச்சு சக்கரை சேத்து சாப்பிட்டா காய்ச்சல் சரியாகும். அரசு விதைய பொடிசெஞ்சு (1-2 கிராம்) சாப்பிட்டு வந்தா மலச்சிக்கல் தீரும், அதோடு பசியும் அதிகரிக்கும்.

அரசு இலைக் கொழுந்த ஒரு கைப்பிடி அளவு எடுத்து பால்ல வேகவச்சு சக்கரை சேத்து சாப்பிட்டா காய்ச்சல் சரியாகும். அரசு விதைய பொடிசெஞ்சு (1-2 கிராம்) சாப்பிட்டு வந்தா மலச்சிக்கல் தீரும், அதோடு பசியும் அதிகரிக்கும்.

அரசு மரப்பட்டையின்  பலன் :

அரசு மரப்பட்டைய இடிச்சு பொடியாக்கி, அப்புறம் அத தீயில கருக்கி, அந்த சாம்பலை ஒரு வெருகடி அளவு (இரண்டு விரல்கள் சேர்த்து எடுக்கும் அளவு- Pinch) நீரில் ஊறவச்சு வடிகட்டி குடிச்சா விக்கல் வருவது சரியாகும். அரசு மரப்பட்டைய பொடி செஞ்சு குடிநீர்ல கலந்து தினமும் குடிச்சு வந்தா சொறி-சிரங்கு குணமாகும். இந்த குடிநீர வாய்ப்புண்ணு குணமாக வாய்கொப்பாளிக்கவும் பயன்படுத்தலாம். பெண்கள் வெள்ளைப்படுவதை தடுக்க இந்த குடிநீர சிறுநீர் தாரையை கழுவ உபயோகிக்கலாம். பட்டை தூள் எடுத்து புண்கள்ல பூசி வந்தா புண் ஆறும்.

அப்புறம்... குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் மாதவிடாய்க்கு முன்ன 3 நாளு இந்த மரத்தில வளரும் புல்லுருவி இலைய அரைச்சு எலுமிச்சம்பழ அளவு சாப்பிட்டு வந்தா கரு உருவாகும் வாய்ப்பு அதிகமாகும்.”