புதினாவுக்குள் ஒளிந்து கிடக்கும் யாருக்கும் தெரியாத ரகசியங்கள்

 
mint

பொதுவாக மலிவு விலையில் காய் கடையில் கிடைக்கும் ஒரு பொருள்தான் புதினா. இந்த புதினாவை நாம் எவ்வாறு உபயோகித்தால் என்ன ஆரோக்கியம் கிடைக்கும் என்று இந்த பதிவில் பாக்கலாம்

1.புதினாவில் உள்ள வைட்டமின் சி , நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

2.நாம் தினமும் சாப்பிடும் உணவில் சிறிதளவு புதினாவை சேர்த்துக் கொள்வது நமது உடல் நலத்தை பாதுகாத்து ஆரோக்கியம் தரும்

3.பொதுவாக மலிவு விலையில் கிடைக்கும் புதினாவிற்கு கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை உண்டு.

4.அதனால் புதினா இலைகளை வெறும் வாயில் மென்று விழுங்கும் போது, அது வாயிலுள்ள கிருமிகளை அழித்து , வாய் நறுமணத்துடன் இருக்க பெரிதும் உதவுகிறது.

5.. ஒரு கைப்பிடி புதினாவை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் 5 நிமிடம் ஊறவைத்து , அந்த நீரை தொடர்ந்து பருகி வர, அஜீரணம் குணமாகி நல்லா பசியெடுக்கும்

stomach

6 சிலருக்கு தலைவலி வரும் இந்த தலை வலி அதிகமாகும் போது, சிறிதளவு புதினா எண்ணெய்யை நெற்றில் தடவி வாருங்கள்

7.பின்னர் சிறிது நேரம் மசாஜ் செய்யும் போது தலைவலியும் அதனால் உண்டாகும் குமட்டலும் கட்டுப்படும்.

8.சிலருக்கு நுரையீரலில் சுவாசம் பிரச்சினை இருக்கும் .இது தொடர்பான தொந்தரவுகளுக்கு புதினா இலைகள்  சிறந்த தீர்வாக அமைகின்றன.

9.புதினாவில் உள்ள ரோச்மரினிக் அமிலம்  சுவாச மண்டலத்தில் தீங்கு விளைவிக்கும் கூறுகளை தடுக்கிறது