ஆங்கில மருந்துகளை தயாரிக்க உதவும் ஆவாரம் இலையின் ஆரோக்கிய ரகசியம் தெரியுமா ?
1.ஆவாரை இலை குளிர்ந்த தன்மையுடையது என்பதால், கோடை வெயிலில் பயணம் செய்பவர்கள் ஆவாரம் இலைக் கொத்துக்களை தலை மீது பரப்பி நிழல் தரும்படி வைத்துச் செல்வர். இதனால் வெப்ப சலனத்தால் வரும் மயக்கம், வலிப்பு போன்றவை நீங்கும்.

2. வாதத்தைப் போக்கும். ஆவாரம் இலையை இடித்து தலை முதல் கால் வரையில் உடம்பில் ஊறும்படி ஓரிரு மணி நேரம் பூசி வைக்க வாதம் என்னும் வாயுத் துன்பம் போகும்.
3. இரவுக் கால பூச்சிகள், கொசுக்கள் போன்றவற்றை விரட்டும். இதற்கு ஆவாரம் இலையைக் காய வைத்து அன்றாடம் மாலை வேளையில் வீட்டில் புகை மூட்ட வேண்டும்.
4. நீரிழிவை கட்டுப்படுத்தும். இன்று, நீரிழிவு மருத்துவத்தில் பயன்படும் பல காப்புரிமை செய்யப்பட்ட இந்திய மருந்துகள் ஆவாரையிலிருந்து செய்யப்படுகின்றன.
5. ஆவாரை இரத்தத்தில் யூரியாவின் அளவைக் குறைக்கும்.
6. ஆவாரம் சக்கரை நோயாளிகளுக்கு ஓர் வரப்பிரசாதமாகும். சர்க்கரை நோயால் ஏற்படும் குழிப்புண்களை மறையச் செய்யும். ஆவாரம் இலையை அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் விழுதுனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான துணியில் வைத்து ஒருநாள் விட்டு ஒருநாள் கட்டிவர நல்ல பலன் கிடைக்கும்.
"நீரிழிவு" நோய்க்கு ஆவாரம் பூ ஒரு வரப்பிரசாதம்னு சொல்லலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டுவலி, அதிக தாகம், நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறுனு இப்படி எல்லாத்துக்கும் ஆவாரம் பூ (கஷாயம்) குடிநீர் ஒரு சூப்பர் மருந்துடா.
தோல் நமைச்சல்:
ஆவாரம் பூவோட பச்சைப்பயறு சேத்து அரைச்சு உடம்பு மேல பூசி குளிக்கலாம். இதனால தோல் நமைச்சல் தீரும்.
ஆவாரை பிசின் 4-10 கிராம் எடுத்து தண்ணியில கலந்து குடிச்சு வந்தா நீரிழிவு, வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
வாய்ப்புண் இருக்குறவங்க ஆவாரை பட்டையை குடிநீரிட்டு வாய் கொப்பளிச்சு வந்தா, நல்ல பலன் கிடைக்கும்
ஆவாரை இலை, பூ, பட்டை, பிசின் ஆகியவற்றோட கலவை! தினமும் 30 - 60 மிலி சமூலக் குடிநீர குடிச்சு வந்தா நீரிழிவு நோய் நல்ல கட்டுக்குள் வரும். ஆண்குறி எரிச்சலும் தீரும். இந்த குடிநீர்ல பனங்கற்கண்டு, ஏலம், வால்மிளகு, சேத்து மணப்பாகு செஞ்சு, அதுல 4கிராம் எடுத்து, பால் இல்லேன்னா தண்ணி கலந்து குடிச்சு வந்தா உடல் வலிமையாகும்.”


