டீ, டிபன், சாப்பாடு எல்லாம் இனிமேல் மண் பாண்டங்களில்தான் கிடைக்கும்!

 

டீ, டிபன், சாப்பாடு எல்லாம் இனிமேல் மண் பாண்டங்களில்தான் கிடைக்கும்!

இந்தியாவின் அனைத்து ரயில் நிலையங்களிலும் மண் பாண்டங்களில் டீ கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இனிமேல் இந்த மண் பாண்டங்களில் மட்டுமே டீ கிடைக்கும் என்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்திருக்கிறார்.

முதற்கட்டமாக 400 முக்கிய ரயில் நிலையங்களில் இது நடைமுறைக்கு வருகிறது. இதையடுத்து டிபன், சாப்பாடும் மண் பாண்டங்களில் கிடைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

டீ, டிபன், சாப்பாடு எல்லாம் இனிமேல் மண் பாண்டங்களில்தான் கிடைக்கும்!

இதுகுறித்துஅமைச்சர் பியூஷ் கோயல், ‘’பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவுக்கு ரயில்வேயின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தற்போது 400 ரயில்நிலையங்களில் மண் கோப்பைகளில் டீ வழங்கப்படுகிறது. இது இனிமேல் அனைத்து ரயில் நிலையங்களிலும் பின்பற்றப்படும்’’ என்று தெரிவித்து அவர், ‘’மண் பாண்டங்களின் தேவையினால் லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பிருக்குது’’ என்றார்.

டீ, டிபன், சாப்பாடு எல்லாம் இனிமேல் மண் பாண்டங்களில்தான் கிடைக்கும்!

டீ மட்டும் இல்லாமல் டிபன், சாப்பாடும் மண் பாண்டங்களில்தான் இனிமேல் வழங்கப்படும் என்றும் அதற்காக ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், ரயில்வே துறை தெரிவித்திருக்கிறது.

லாலு பிரசாத் யாதவ் ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது, ரயில் நிலையங்களை மண் குவளை பயன்பாட்டினை கொண்டுவந்தார். அவருக்கு பிறகு பிளாஸ்டி கப், பேப்பர் கப் வந்துவிட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் லாலு பிரசாத் யாதவ் கொண்டு வந்த அந்த திட்டம் இப்போது மீண்டும் ரயில் நிலையங்களில் நடைமுறைக்கு வருகிறது.