தீராத வாயுத்தொல்லையை தீர்த்து வைக்கும் வீட்டு வைத்தியம்

 
Gas

வாயுத்தொல்லை வந்தால் நிம்மதியாக வாழவே விடாது .ஒரு கல்யாண வீடோ இல்லை விருந்து வீடோ நிம்மதியாக சாப்பிட முடியாமல் செய்து விடும் இந்த வாயு பிரச்சினை ,சாப்பிட்டா வாயு பிரச்சினை சாப்பிடாமல் விட்டா வயிறு பிரச்சினை என்று நம்மை பாடாய் படுத்தி எடுக்கும் இந்த பிரச்சினை .இதற்கு காரணம் நாம் சாப்பிடும்போதே வாயு வயிற்றில் சென்று விடும் அல்லது கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள பீன்ஸ் ,முட்டைகோஸ் ,மற்றும் கிழங்கு வகைகளை அதிகம் எடுத்து கொள்வதும் ஒரு காரணம் .சிலபேருக்கு வயிற்றில் வலி, வயிறு வீக்கம், நெஞ்செரிச்சல் என்று மாறி மாறி ஒன்று வந்து தொல்லை படுத்தும் .

stomach

1.இந்த தீராத வாயு தொல்லைக்கு இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த வாயுத்தொல்லை நீங்கி நம் உடல்  குணமாகும்.

2.காலரா நோய் தாக்காமல் இருக்க  எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் போதும் எந்த காலராவும்  அண்டாது.

3.எடை குறைய நினைப்போர் சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது.

4.சாப்பிட்டபின் இளநீரை அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும்.

5.நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.

6.ஒரு டம்ளர் கொதிநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வலி பறந்து நம் ஆரோக்கியம் சிறக்கும்