சர்க்கரை நோயாளிகள் நூறு வயசு வாழ சில தாறுமாறான வழிகள்

 

சர்க்கரை நோயாளிகள் நூறு வயசு வாழ சில தாறுமாறான வழிகள்

இந்தியாவில்தான் நீரிழிவு நோயாளிகள் அதிகம். தமிழகத்தில் சுமார் 10 சதவிகிதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது

நீரிழிவுக்காரர்களுக்கு ஆரோக்கியம் சாத்தியமா? இந்தக் கேள்வியைச் சமீபத்தில் எல்லோரும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நீரிழிவு நோய் ஆயுளைக் குறைத்துவிடும் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. ஆனால் நீரிழிவு நோய் இருந்தும் ஆரோக்கியமாக நூறு வயசு வாழ சில தாறுமாறான வழிகள்: 

சர்க்கரை நோயாளிகள் நூறு வயசு வாழ சில தாறுமாறான வழிகள்

தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது, உணவு கட்டுப்பாடுகளைப் பின்பற்றி ஆரோக்கியமான உணவுகளை உண்பது, சர்க்கரைச் சத்துள்ள உணவுகளைத் தவிர்ப்பது இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீரிழிவு நோய் இருந்தாலும் ஆரோக்கியமான வாழ்க்கையைத் தொடர முடியும். மேலும் பரிசோதனைகள் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறித்த விழிப்புணர்வுடன் செயல்படுவதும் அவசியம்.

மருத்துவர்களின் அறிவுரைகளைக் கடைபிடிக்காதவர்களும் அதிகக் கொழுப்புள்ள உணவுகளை உண்பவர்களும் உடலுக்குப் போதிய உழைப்பை அளிக்காதவர்களும் நீரிழிவு நோயை முற்றவைக்கிறார்கள். நீரிழிவுப் பிரச்சினை அதிகரிக்கும்போது கண்கள், சிறுநீரகங்கள், கால்கள், இதயமும்கூடப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

நீரிழிவைக் கட்டுப்படுத்த முடியாமல் முற்றவிடுபவர்கள் மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். இம்மாதிரியான சூழலில் அதை கட்டுக்குள் கொண்டுவர இன்சுலின் ஊசி எடுத்துக்கொள்ளலாம். இப்போது வலியில்லாமல் இன்சுலின் ஊசிகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. வலியில்லாத அந்த ஊசிகள் இன்சுலின் பம்ப் (Insulin pump) என அழைக்கப்படுகின்றன.

தினமும் பழங்களைச் சாப்பிட்டுவந்தால், நீரிழிவு நோய் தாக்குவதற்கான ஆபத்து குறைகிறது எனப் புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இரண்டு லட்சம் பேரின் உணவுப் பழக்கம், உடல் ஆரோக்கியம் தொடர்பான 25 ஆண்டுத் தரவுகளை ஆராய்ந்ததில் இது தெரியவந்துள்ளது.

குறிப்பாக திராட்சை, ஆப்பிள் போன்ற பழங்களைச் சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு நோய் தாக்கும் ஆபத்து 25 சதவிகிதம் குறைகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

டிப்ஸ்:

#ரத்தச் சர்க்கரை, ரத்தஅழுத்தம், கொழுப்பை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது

#மூன்று மாதங்களுக்கு ஒரு முறை  மருத்துவரைச் சந்தித்து எல்லாம் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வது

#3மாதங்களுக்கு ஒரு முறை ரத்தச் சர்க்கரை, கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்துகொள்வது. குறிப்பாக ஹெச்.பி.ஏ.1சி வேல்யு எடுப்பது.

#3 முறை சாப்பிடுவதற்கு பதிலாக, 4-5 முறை சாப்பிடும் முறையை பின்பற்றுவது

#பரிந்துரைக்கப்பட்ட மருந்து களை உட்கொள்வது

#புகைப்பிடிப்பதைக் கை விடுவது

#பாதங்களில் நோய்த்தொற்று, கால்ஆணி, காய்ப்பு போன்றவை ஏற்படுகின்றனவா என்று தினசரி கண்காணிப்பது

#கண் விழித்திரையை ஆண்டுதோறும் பரிசோதிப்பது

#6 மாதங்களுக்கு ஒரு முறை சிறுநீரக செயல்பாடு பரிசோதனை செய்துகொள்வது

#வாய் துர்நாற்றம் அடித்தால் பல் மருத்துவரை பார்ப்பது