வாயை கட்ட முடியாததால் உண்டாகும் வாயு தொல்லைகளை நீக்க, தாய் போல் உதவும் சூப்

 

வாயை கட்ட முடியாததால் உண்டாகும் வாயு தொல்லைகளை நீக்க, தாய் போல் உதவும் சூப்

ன்றைய பரபர உலகில் பலரும் உணவு இடைவேளையின் நேரம் தவறுபவர்கள் ஆகிவிட்டோம். காலை சாப்பாட்டை 11 மணிக்கும், மதிய உணவை 3 மணிக்கும், இரவு உணவை நடு இரவுக்கும் நகர்த்திச் செல்கிறோம்.

தவிர, எண்ணெய்க் குளியல், செயற்கை சுவையூட்டிகள் என்று மாறிவிட்டன உணவுகள். விளைவு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பிரச்னைகளால் அடிக்கடி அவதிப்படுகிறோம்.

மேலும் வேகவேகமாக தண்ணீர் குடிப்பதனாலும், வேகவேகமாக சாப்பாட்டை விழுங்குவதாலும், சிக்லெட், சூயிங்கம் முதலியவைகளை அடிக்கடி மெல்லுவதாலும், சரியான அளவில்லாத பல்செட்’ மாட்டியிருப்பதாலும், வெளிக்காற்று, வாய் வழியாக, வயிற்றுக்குள் போய், கேஸ்’ உருவாகிறது. வாய் வழியாக விழுங்கப்படும் கேஸ், ஏற்கனவே வயிற்றில் உருவான கேஸ், இவை இரண்டும் சேர்ந்து, வயிற்றிலும், குடலிலும் பெருமளவு தங்குகிறது.

வாயை கட்ட முடியாததால் உண்டாகும் வாயு தொல்லைகளை நீக்க, தாய் போல் உதவும் சூப்

சத்தான உணவு பொருட்களை நாம் எடுத்துக் கொள்ளாவிடில் நம் உடலில் தேங்கியிருக்கும் வாயுவானது நமக்கு பெரிய பிரச்சனையாக மாறும் அபாயம் உண்டு. அதுவே சத்துள்ள உணவு பொருட்களை உட்கொள்ளும் பொழுது வாய்வு பிரச்சனை ஏற்பட்டாலும் அதில் கிடைக்கும் உயிர்சத்துக்கள், கனிமங்கள், மைக்ரோ நியூட்ரிடியன்ஸ் போன்றவை கிடைத்து அதில் இருந்து தானாகவே நம்மை தற்காத்துக் கொள்ள உதவும்.

மலம் கழிக்கும் பொழுது முழுமையாக வெளியேறாமல் இருப்பது, வயிற்று பொருமல், வயிற்று உப்புசம், வாயு வெளியேறுவது போன்றவை வாயுத் தொல்லையின் அறிகுறிகளாக இருக்கின்றன. காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களை சரியாக முடிப்பவர்கள் வாயு தொல்லைக்கு உட்படுவது இல்லை. இதிலிருந்து நாம் முழுமையாக விடுபட சில மூலிகைப் பொருட்களை வைத்து சூப் செய்யலாம். இந்த தொந்தரவு இருக்கும் பொழுது இதனை ஒரு கப் வீதம் தினமும் குடித்து வந்தால் இதிலிருந்து முழுமையாக விடுபட்டு விடலாம்.

மூலிகை சூப் செய்ய தேவையான பொருட்கள்: கற்பூரவள்ளி இலை – 10, ஓமம் – 2 டீஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், தனியா – 2 டீஸ்பூன், மிளகு – 4, இஞ்சி ஒரு துண்டு, பூண்டு – 4 பல், பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, வெற்றிலை நான்கு, நெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவிற்கு.

முதலில் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு, கற்பூரவள்ளி இலை, வெற்றிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பிறகு மற்றொரு வாணலியில் கொஞ்சமாக நெய் சேர்த்து காய விடுங்கள். பின்னர் அதில் சீரகம், தனியா, மிளகு, சோம்பு, ஓமம், பூண்டு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து லேசாக வதக்கி பின்னர் வதக்கி வைத்துள்ள கற்பூரவல்லி இலை மற்றும் வெற்றிலையும் சேர்த்து கொள்ளுங்கள். பின் அதனுடன் 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். கொதித்து சூப் பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைத்து பரிமாற வேண்டியது தான்.

கேஸ் பிரச்சினை உள்ளவர்கள் காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், புருக்கோலி, பீன்ஸ், போன்ற உணவுகளை உட்கொள்ளக்கூடாது. அதேபோல் பால் பொருட்கள் சோடா, கார்பனேட் பானங்கள், பீர் போன்றவைகளை உட்கொள்ளக்கூடாது என்று உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் மன அழுத்தம் இருந்தாலும் வாயுத் தொந்தரவு ஏற்படும். எனவே எதற்காகவும் கவலைப்படாமல் மனதை ரிலாக்ஸ் ஆக வைத்துக்கொண்டாலும் கேஸ் பிரச்சினை ஏற்படாது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.