லிப் லாக்கில் இவ்வளவு நன்மைகளா?… அப்போ உடனே களத்துல இறங்குங்க!

 

லிப் லாக்கில் இவ்வளவு நன்மைகளா?… அப்போ உடனே களத்துல இறங்குங்க!

லிப் லாக். இதை சொன்னாலே இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் மனதில் பட்டம் பூச்சி பறக்கும். முகத்தில் நாணம் வழிந்தோடும். மனிதன் கண்டுபிடித்ததில் ஆகச்சிறந்த விஷயம் லிப் கிஸ் என்றால் அது மிகையாகாது. உடலுறவில் பிரதான பங்கு வகிப்பதும் அதுவே. சொல்லப் போனால் உறவின் ஆரம்பமே லிப் கிஸ் தான். வெறும் காமம் சேர்ந்தது மட்டும் தானா என்றால் அப்படியும் கிடையாது. இணையர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொள்ளவும் லிப் கிஸ் தான் உதவுகிறது. மற்ற விலங்குகளிடம் இல்லாமல் மனிதர்களிடம் இருக்கும் சிறந்த பண்பும் இது தான்.

லிப் லாக்கில் இவ்வளவு நன்மைகளா?… அப்போ உடனே களத்துல இறங்குங்க!

லிப் கிஸ் மனதிற்கு தேவையான அன்பைப் பரிமாறிக் கொள்வதற்காக மட்டுமல்லாமல் உடலுக்குத் தேவையான சில விஷயங்களையும் பரிமாறிக் கொள்ள பயன்படுகிறது. அது அறிவியல்பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மனிதர்களின் உதடுகளில் அதிகப்படியான உணர்ச்சி நரம்புகள் குவிந்து கிடக்கின்றன. லிப் கிஸ்ஸின் போது அந்த உணர்ச்சி நரம்புகள் வேலை செய்கின்றன. அதைச் சீண்டும் போது அது மூளையைத் தூண்டுகிறது. மூளையிலுள்ள ஹேப்பி ஹார்மோன்கள் துருதுருவென வேலை செய்து மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன.

லிப் லாக்கில் இவ்வளவு நன்மைகளா?… அப்போ உடனே களத்துல இறங்குங்க!

இரண்டு உதடுகள் ஒன்றுசேரும் சமயத்தில் 9 மிகி (மில்லிகிராம்) நீர், 0.7 மிகி புரோட்டீன், 0.18 மிகி ஆர்கானிக், 0.71 மிகி கொழுப்புகள், 0.45 சோடியம் குளோரைடு ஆகியவை இருவருக்கும் பரிமாற்றம் செய்யப்படுகிறது. அதேபோல குறிப்பிட்ட அளவு கலோரி எரிக்கப்படுகிறது. கிஸ் செய்யும்போது 30 வகையான தசைகள் வேலைசெய்வதால் ஒரு நிமிடத்திற்கு 2 முதல் 26 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. லிப் கிஸ் செய்வது பாவம் என சொற்பமான கலாச்சார குழுக்கள் கூறினாலும் 168 கலாச்சார குழுக்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. லிப் கிஸ் 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே இருப்பதாகவும் வரலாற்று தரவுகள் தெரிவிக்கின்றன.

லிப் லாக்கில் இவ்வளவு நன்மைகளா?… அப்போ உடனே களத்துல இறங்குங்க!

கிஸ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

1.கிஸ் செய்வது மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருப்பதால் கணவன்-மனைவிக்குள்ளோ, காதலன்-காதலிக்குள்ளோ இருக்கும் உறவு பலமாக உதவுகிறது. குறிப்பாக, மகிழ்ச்சியான உடலுறவுக்கும் இது வழிவகுக்கிறது.

2.மன உளைச்சலில் இருக்கும்போது கிஸ் செய்தால் சில கெமிக்கல்கள் மூளையிலிருந்து வெளியேறுகின்றன. அவை நம்முடைய மனதை ஆசுவாசப்படுத்தி சகஜ நிலைக்குத் திரும்ப வைக்கின்றன. மனதிற்குப் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.

3.கலோரிகள் கரைவதால் உடலில் வளர்சிதை மாற்றங்களும் நடைபெறுகின்றன.

4.இயற்கையாகவே நம்முடைய எச்சிலில் நல்ல பாக்டீரியாக்களும் வைரஸ்களும் இருக்கின்றன. கிஸ் செய்யும்போது எச்சில் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகின்றன. இதனால் நம்முடைய பற்களுக்கும் ஈறுகளுக்கும் பாதுகாப்பைக் கொடுக்கின்றன. நல்ல நுண்ணுயிரிகளால் நம்முடைய நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

லிப் லாக்கில் இவ்வளவு நன்மைகளா?… அப்போ உடனே களத்துல இறங்குங்க!

தீமைகள்

1.கிஸ் செய்வதில் மிகப்பெரிய அபாயம் என்னவென்றால் ஒருவருக்கு தொற்று இருந்தால் அது எளிதில் மற்றொருவருக்குப் பரவிவிடும்.

2.தொண்டை, மூக்கில் இருந்து வெளிவரும் திரவ துளிகள் உள்ளே செல்லும் பட்சத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இது மிகப்பெரிய நோய்கள் பரவவும் வழிகோலுகின்றன.