கொளுத்தற வெயிலில் சூட்டு கொப்புளம் வந்தவங்களுக்கு சூப்பரான சிகிச்சை.

வெயில் காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூட்டுக் கொப்பளங்களால் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர்.இதனை எளிய முறையில் போக்க ஒரு சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
முகத்தில் பருக்கள் வந்தாலே அதை கிள்ளி எறிய கூடாது. அதை அடிக்கடி தொட கூடாது என்று சொல்வார்கள். அப்படி இருக்கும் போது கிருமித்தொற்றால் வரக்கூடிய இந்த சூட்டு கொப்புளங்களை அழுத்தவோ உடைக்கவோ செய்ய கூடாது. இதை தொட்டால் கிள்ளினால் இதன் உள்ளே இருக்கும் சீழ் ஆனது வெளியே பரவும். அதோடு கிருமிகள் அருகில் இருக்கும் இடங்களுக்கும் சென்று பரவி அதிகமாகிவிடும். மேலும் இது அதிக வலியையும் எரிச்சலையும் கூட உண்டாக்கிவிடும்.
எப்சம் எண்ணெய், வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றிற்கு கிருமி எதிர்ப்பு தன்மை உள்ளது. இவை கொப்பளங்களை எதிர்த்து போராடுகிறது. கிருமிநாசினி தன்மை உள்ள இந்த எண்ணெய்களை பயன்படுத்துவதால் கொப்பளங்கள் நீண்ட காலம் சருமத்தில் இருப்பதில்லை.
கொப்பளங்கள் பெரிதாக, வலி அதிகமாக , சீழ் அதிகமாக இருந்தால் மருத்துவரிடம் சென்று கொப்பளத்தை வெட்டி எடுக்க வேண்டியது அவசியமாகும். கொப்பளத்தைக் குத்தி அதில் உள்ள சீழை வெளியேற்றி காயத்தை மருத்துவர்கள் அகற்றுவார்கள்.
பொதுவாக இது கிருமியின் தீவிரம் பொறுத்து 2 நாட்கள் முதல் 3 வாரங்கள் வரை இருக்கலாம். ஆரம்ப கட்டத்தில் வீட்டு வைத்தியம் மூலமே இதை சரி செய்துவிட முடியும் என்பதால் இதை தவிர்க்காமல் செய்யுங்கள். அதே நேரம் கட்டி வலியோடு காய்ச்சலும் வந்தால் மருத்துவரின் ஆலோசனை அவசியம். சூட்டு கொப்புளத்துக்கு செய்ய வேண்டிய வீட்டு வைத்தியங்கள் குறித்து பார்க்கலாம்.
ஒரு நாளைக்கு மூன்று முறை என்று ஒரு வாரத்திற்குச் செய்து வந்தால், இந்த சூட்டுக் கட்டிகள் கரைவதை நீங்கள் காணலாம். அப்படிச் செய்யும் போது கட்டிகள் கரையத் தொடங்கினால், அந்த இடத்தை நன்கு சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
மஞ்சளைச் சிறிது நீரில் குழைத்துப் பாதிக்கப் பட்டுள்ள இடத்தில் பூசவும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் கட்டி உடைந்து குணமாகி விடும். இந்த மஞ்சள் தூளுடன், சிறிது இஞ்சியை அரைத்துச் சேர்த்துத் தடவினால் விரைவில் குணமாகி விடும்.
விளக்கெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெய் இவை இரண்டையும் அல்லது இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கட்டி இருக்கும் இடத்தில் தொடர்ந்து தேய்த்துக் கொண்டு வந்தால், கட்டி விரைவில் உடைந்து சரியாகி விடும்.
வேப்பம் இலைகளைச் சிறிது பறித்து அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்து, கட்டி இருக்கும் இடத்தில் பூசவும். இப்படித் தேய்த்து வந்தால், சூட்டுக் கொப்பளம் விரைவாகக் குணமடையும்.
சிறிது கல் உப்பைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு, சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால், கல் உப்பை நன்கு தூள் ஆகி, சிறிது தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் கலந்து நன்கு குழைத்து, கட்டி இருக்கும் இடத்தில் தடவி வந்தால், இந்த கட்டி விரைவில் குணமடைந்து விடும்.


