குப்பை போல குவிஞ்சிருக்கும் நோய்களுக்கு, குட் பை சொல்ல வைக்கும் குப்பை மேனி

 

குப்பை போல குவிஞ்சிருக்கும் நோய்களுக்கு, குட் பை சொல்ல வைக்கும் குப்பை மேனி

நம்மை சுற்றி வளரும் மூலிகைகளை கண்டுகொள்ளாமல் மருந்தை வெளியில் தேடி ஓடிகொண்டிருக்கிறோம். குப்பை மேட்டில் இருப்பதெல்லாம் உதவாது என்ற எண்ணத்தை இனியாவது மாற்றிகொள்ளுங்கள். குப்பைமேனி கசப்பு, காரம், வெப்பத்தன்மை கொண்டது. சமவெளிப்பகுதிகளில் சாதாரணமாக காணப்படும் செடி வகை இது. தோட்டங்களிலும், சாலை ஓரங்களிலும் அநாயசமாக இதை பார்க்கமுடியும். தானாக வளரக்கூடியது. இலை முக்கோண வடிவத்திலும் இலையின் ஓரங்களில் சிறு சிறு அரும்புகளும் இருக்கும். சில இடங்களில் மஞ்சள் நிறப்புள்ளிகளும் இருக்கும். குப்பைமேனி பூக்கள் வெள்ளை நிறத்தில் சிறியதாக இருக்கும். குப்பைமேனி இலையின் காய்கள் முக்கோண வடிவில் சிறு மிளகு அளவு இருக்கும்.

குப்பைபோல் (நோய்களால்) ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துறதால குப்பைமேனினு நாம சொல்றோம். பொதுவா குப்பைமேனிச் செடியில பலவித மருத்துவ குணங்கள் இருக்கு. அதுல குறிப்பா சொல்லணும்னா அது ஒரு நல்ல மலம் இளக்கியா இருந்து, மலச்சிக்கலுக்குத் தீர்வா இருக்குது. குப்பைமேனி இலைச்சாறு பலவகை ஆரோக்கியப் பிரச்சனைக்கு நல்ல மருந்தா இருக்குது.

குப்பை போல குவிஞ்சிருக்கும் நோய்களுக்கு, குட் பை சொல்ல வைக்கும் குப்பை மேனி

குப்பைமேனி இலையை அரைச்சு மலவாய் வழியாய் (சிறிய நெல்லிக்காய் அளவு) உட்செலுத்த நாட்பட்ட மலக்கட்டு நீங்கும். இலையை சாறெடுத்து சிறிது உப்பு சேர்த்து குடிச்சா மலம் நன்கு கழியும். இலைச்சாறை தலைவலிக்கு பூசினா, வலி குறையும். இலைச்சாறை நல்லெண்ணெயுடன் கலந்து காய்ச்சி வலியுள்ள இடங்களில் தடவலாம். இலைச்சாறை படுக்கை புண்களுக்கு (Bed sores) பூசி வந்தா அவை குணமாகும். இலைய விளக்கெண்ணெயில வதக்கி இளஞ்சூட்டோட படுக்கை புண்ணுக மேல வச்சு கட்டிவந்தாலும் கூட புண் ஆறிடும்.

குப்பைமேனி வேர்ல கஷாயம் செஞ்சு (30 – 100 மிலி) குடிச்சா குடற்பூச்சிகள் சாகும். வேரைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் தண்ணியில கலந்து, அத கால்பாகமாக (குடிநீர்) வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிச்சா மலச்சிக்கல் தீரும்.

குப்பையில இருந்து கரண்ட் எடுக்குற திட்டம் எந்த அளவுக்கு சாத்தியம்னு தெரியல, ஆனா குப்பைமேனிச் செடியில இருந்து ஆரோக்கியம் எடுக்குறது கண்டிப்பா சாத்தியம்,. குப்பைமேனி இலையை  சட்னி செய்தும் சாப்பிடலாம் 

குப்பைமேனி இலையின் சாற்றினை சிறியவர்கள் (12 வயதிற்கு கீழ்) 1 – 4 தேக்கரண்டி மற்றும் பெரியவர்கள் 15 – 30 மில்லி உட்கொள்ள வயிறு சுத்தமாகும், கோழையை அகற்றும், வயிற்றுப்புழுக்களை கொல்லும்.

குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும். குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.

குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும்.

குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும்.குப்பைமேனி இலையைக் கீரையாக ஆமணக்கு எண்ணெயில் தாளித்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து உண்டுவர வாய்வுடனே சேர்ந்த பொல்லாத சேத்துமப்பிணிகள் எல்லாவற்றையும் போக்கி, உடல் நலம் பெறும்.