ஆண்களுக்கு ஏற்படும் குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு அளிக்கும் ஓரிதழ் தாமரை!

 

ஆண்களுக்கு ஏற்படும் குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு அளிக்கும் ஓரிதழ் தாமரை!

ஆண், பெண் இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்து, குழந்தைப் பேற்றை அளிக்கும் வகையில் ஏராளமான மூலிகைகள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தகுந்தது ஓரிதழ் தாமரை. தாமரை என்ற பெயர் உள்ளதால் நீர்நிலைகளில் வளரும் தாவரம் என்று கருத வேண்டாம். இது வயல் ஓரங்களில், தரையில் வளரும் சிறு தாவரம் ஆகும்.

ஆண்களுக்கு ஏற்படும் குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு அளிக்கும் ஓரிதழ் தாமரை!

இதை ஆயுர்வேத மருத்துவத்தில் ரத்தின புருஷ் என்று அழைப்பார்கள்.  சித்த மருத்துவத்தில் இதை காயகற்ப மூலிகை என்று கொண்டாடுவார்கள். இதன் பூ, இலை, தண்டு, வேர், காய் என அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டது. ஆண்களுக்கு விந்தணுக்கள் கெட்டியாக உதவும் சிறந்த மூலிகை இது. இந்தியாவின் வயாகரா என்று கூட இதை சொல்லலாம் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

ஓரிதழ் தாமரையின் இலை, தண்டு, வேர், பூ, காய் ஆகியவற்றை பறித்து 10 நாட்களுக்கு நிழலில் காய வைத்து பொடித்துக்கொள்ள வேண்டும். இதை ஓரிதழ் தாமரை சூரணம் என்று சொல்வார்கள். ஒரு மண்டலத்துக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த பொடியை தேன் அல்லது நீரில் குழைத்து சாப்பிட வேண்டும். அதன் பிறகு ஒரு தேக்கரண்டி அளவுக்கு ஆட்டுப் பால் குடித்து வந்தால் ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கை, மற்றும் அதன் வீரியம் அதிகரிக்கும்.

ஓரிதழ் தாமரை இலை இரண்டை தினமும் மென்று சாப்பிட்டு பசும்பால் குடித்து வந்தால் கூட விந்தணு குறைபாடு சரியாகும். மேலும் உடலின் வெப்பம் குறைந்து சூடு நோய்கள் மறையும். சருமம் பொலிவு பெறும். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு.

தினமும் ஓரிதழ் தாமரை இலையை அரைத்து எலுமிச்சை பழ அளவு எடுத்து 200 மி.லி பசும் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சருமம் பொலிவு பெறும். நரம்புத் தளர்ச்சி விலகும். சிறுநீரக நோய்கள் மறையும்.

தூக்கத்தில் விந்து வெளியேறும் பிரச்னை உள்ளவர்கள் ஓரிதழ் தாமரை பொடியை காலை, மாலை என இரு வேளை தண்ணீரில் கலந்து குடித்து வர வேண்டும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் தூக்கத்தில் விந்து வெளியேறுவது நிற்கும்.

இதில் அதிக அளவில் இரும்புச் சத்து உள்ளது. ரத்த சோகை, இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்கள் ஓரிதழ் தாமரை இலையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரும்புச் சத்து குறைபாடு பிரச்னைகள் நீங்கும்.

ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கு ஏற்படும் இனப்பெருக்க மண்டல பிரச்னைக்கும் ஓரிதழ் தாமரை தீர்வளிக்கிறது. சினை பையில் முட்டை விடுபடுவதில் உள்ள பிரச்னைகளை ஓரிதழ் தாமரை தீர்க்கிறது. குழந்தையின்மை பிரச்னை உள்ளவர்கள் சித்த மருத்துவர் பரிந்துரை அடிப்படையில் இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் குழந்தைப் பேறு விரைவாகக் கிடைக்கும்!