நம்மை கடுப்பேத்தும் எந்தெந்த நோய்களிலிருந்து கடுக்காய் காப்பாற்றும் தெரியுமா ?

கடுக்காயில் அறுசுவைகளில் இருக்கும் உவர்ப்பைச் சுவையைத் தவிர மற்ற ஐந்து வகை சுவைகளாக இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகியவை அடங்கியுள்ளன. வாய், தொண்டை, இரைப்பை மற்றும், குடலில் உள்ள புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் தூண்டும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் பல்வேறு நோய்களையும் குணப்படுத்தும். காது நோய் குணப்படுத்தும். கடுக்காய் வலிமையூட்டி, நீர்பெருக்கி, உள்ளழலகற்றி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், தலைநோய், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், மேகம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும்.
திரிபலா சூரணத்தை 48 நாட்கள் தொடர்ந்து பால் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாழலாம் என்று சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய் இந்த மூன்றையும் பொடியாக்கி திரிபலா சூரணம் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு கடுக்காயின் பலன்கள் அதிகம் உள்ளது. எனவே கடுக்காயின் பயன்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
மலச்சிக்கல்:
கடுக்காயில் மலமிளக்கிய பண்புகள் உள்ளன. இரவு தூங்குவதற்கு முன்பு கடுகாய் பொடியை ஒரு டம்ளர் சூடான நீரில் கலந்து குடித்தால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அஜீரணம், அமிலத்தன்மை போன்ற பல வயிற்றுப் பிரச்சினைகளிலிருந்து உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். கடுக்காய் பசியைத் தூண்டும். செரிமானதை அதிகரிக்கும்.
பித்த நோய்கள் குணமாகும்:
10 கிராம் கடுக்காய் பொடியை எடுத்து, அதே அளவு சுக்கு, திப்பிலி இரண்டு தூள்களையும் கலந்து காலை, மாலை சாப்பிட்டால் வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.
தொண்டை புண்:
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். ஒரு டீஸ்பூன் கடுக்காய் பொடியை சூடான நீரில் கலந்து. தாங்கக்கூடிய வெப்பநிலைக்கு வந்ததும், குடிக்க வேண்டும். தொண்டை புண் குணமாகும். மேலும் ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
நீரிழிவு நோய்:
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க கடுக்காய் உதவுகிறது. நீரிழிவு நோய்க்கான மருந்துகளை ஏற்கனவே நீங்கள் எடுத்துக்கொண்டிருந்தால் மருத்துவரிடம் கேட்டு எடுத்து கொள்ளலாம்.
பல் ஆரோக்கியம்:
இரத்தக் கசிவு, பிற ஈறு நோய்கள், நோய்த்தொற்றுகள் மற்றும் பற்களின் பிரச்சினைகள் போன்ற பல் பிரச்சினைகளுக்கு கடுக்காய் மிகவும் நல்லது.
பல் துலக்கிய பின், பற்களையும், ஈறுகளையும் கடுக்காய் தூள் கொண்டு மசாஜ் செய்து, நன்றாக மசாஜ் செய்த பின் ஒரு நிமிடம் கழித்து வாய் கொப்புளிக்கவும். உங்கள் ஈறுகளை வலுப்படுத்த நீங்கள் அதை தவறாமல் செய்யலாம்.
தோல் மற்றும் முகத்தை பாதுகாக்கும்:
கடுக்காய் சருமத்தை சுத்தப்படுத்தும். இது உங்கள் உடலின் நச்சுகளை அகற்றும் என்பதால், கடுக்காய்பொடியை உட்கொள்வதால் உங்கள் சருமத்தை சுத்தப்படுத்தும்.
உங்கள் உடலில் இருந்து நச்சுகள் வெளியேறும் என்பதால் இதை எடுத்துக்கொள்வதன் மூலம் பளபளப்பான சருமத்தைப் பெறலாம். இது முகப்பரு பிரச்சினைகளுக்கும் உதவுகிறது. தேவையான அளவு கடுக்காய் பொடியை சிறிது தண்ணீரில் கலந்து அதில் இருந்து ஒரு கலவை (பேஸ்ட்) தயாரிக்கவும். முகத்தில் இந்த பேஸ்ட்டைப் பயன்படுத்தலாம்.
கிட்டதட்ட 60 அடி உயரத்திற்கு மேல் வளரும் தன்மை கொண்டது தான் இந்த கடுக்காய் மரம். கருமையான கெட்டியான பட்டைகளைக் கொண்டிருக்கும். அதன் அடிபாகம் சுமார் 1.5 அடி வரை இருக்கும். இந்த கடுக்காய் மரம் குளிர் காலத்தில் இலைகளை உதிர்த்து கோடை காலத்தின் தொடக்கத்தில் துளிர் விட ஆரம்பித்து சித்திரை, வைகாசி மாதங்களில் காய்கள் காய்க்கத் தொடங்கும். இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இவை சிறுகாம்புடன் முட்டை வடிவத்தில் இருக்கும்.

