உடலை சீராக்கும் சீரக தண்ணீர்!

 

உடலை சீராக்கும் சீரக தண்ணீர்!

மஞ்சள், மிளகு, சீரகம் என நாம் உணவில் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் மருத்துவ குணம் நிறைந்ததாகவே உள்ளது. சுவைக்காக சேர்க்கப்படும் சீரகம் நம் உடலை சீராக வைத்திருக்க உதவும் அரிய சத்துக்கள் நிறைந்ததாக உள்ளது. இது உடல் எடை குறைப்பு தொடங்கி பல்வேறு நலன்களை நமக்குத் தருகிறது. தண்ணீராக அருந்துவதற்குப் பதில் வெந்நீராக அருந்துவது நல்லது என்று சொல்வார்கள். வெந்நீராக அருந்துவதற்கு பதில் அதில் சிறிது சீரகம் போட்டு சீரக நீராக அருந்தி வந்தால் பல்வேறு பலன்கள் கிடைக்கும்.

உடலை சீராக்கும் சீரக தண்ணீர்!

சீரகத்தில் உள்ள பாலிஃபீனால்கள் உடல் எடையைக் குறைக்கத் துணை செய்கின்றன. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் ஆக்சிடேட்டிவ் ஸ்டிரெஸ் காரணமாக ஏற்படக்கூடிய செல்கள் பாதிப்பைத் தடுத்து நிறுத்துகிறது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, நோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது.

சீரக நீரைத் தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படக்கூடிய ரத்த சோகை நோய் வராது. சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஹீமோகுளோவின் அளவை அதிகரிக்கத் தூண்டுகோலாக அமைகிறது. இதன் காரணமாக அதிக அளவில் ஹீமோகுளோபின் உற்பத்தியாகி உடல் முழுக்கத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்கிறது.

உடல் பருமனானவர்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்னை கொலஸ்டிரால் அளவு அதிகரிப்பது. தினமும் மூன்று கிராம் அளவுக்கு சீரகத்தைச் சாப்பிட்டு வந்தாலே உடலில் உள்ள கொலஸ்டிரால், குறிப்பாக கெட்ட கொழுப்பு அளவு குறையும்.

சீரகம் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும் தன்மையும் கொண்டதாக உள்ளது. ஆய்வுக்காக குழுவினர் ஒருவரைத் தொடர்ந்து சீரகம், சீரக எண்ணெய் போன்றவற்றை எடுத்து வரச் செய்துள்ளார். எட்டு வார முடிவில் நடத்தப்பட்ட ஆய்வில் அவர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்திருந்தது. இன்சுலின் மற்றும் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்திருந்தது தெரிந்தது.

சீரக நீர் வயிறு செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தும் தன்மை கொண்டது. இது செரிமான மண்டலத்தில் உள்ள குறைபாட்டைச் சரி செய்கிறது. உணவு செரிமானத்துக்குத் தேவையான அமிலங்கள், நொதிகளை போதுமான அளவு சுரக்கச் செய்ய உதவுகிறது. வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, செரிமானக்குறைபாடு போன்றவற்றைத் தவிர்க்க உதவுகிறது.